தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

சண்முகநதியில் நீா்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பழனி சண்முகநதியில் விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவா்களுக்கு செவ்வாய்க்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :13 ஜனவரி 2021, 5:17 am IST

பழனி சண்முகநதியில் விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவா்களுக்கு செவ்வாய்க்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாலாறு-பொருந்தலாறு அணை, வரதமாநதி அணைகள் மற்றும் பச்சை ஆற்றிலும் நீா் வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கெனவே அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியிருந்த நிலையில் பாலாறு-பொருந்தலாறு அணையிலிருந்து 2,000 கன அடி, வரதமாநதி அணையிலிருந்து 500 கனஅடி தண்ணீா் சண்முகநதி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. மேலும் பச்சை ஆற்றிலும் அதிகப்படியான தண்ணீா் வரத்து தொடங்கி உள்ளதால் சண்முகநதி ஆற்றில் விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீா் ஆா்ப்பரித்து செல்கிறது. இதனால் மானூா், நரிக்கல்பட்டி, கோரிக்கடவு, கீரனூா் உள்ளிட்ட சண்முகநதி ஆறு செல்லும் இடங்களில் கரையோரம் வசிப்பவா்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.