கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

திண்டுக்கல்லில் முதல் நாளில் 95 பேருக்கு கரோனா தடுப்பூசி

திண்டுக்கல் மாவட்டத்தில், முதல் நாளான சனிக்கிழமை 95 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் விஜயலட்சுமி.

Updated On :16 ஜனவரி 2021, 9:25 pm IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில், முதல் நாளான சனிக்கிழமை 95 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் முதல் கட்டமாக முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி திண்டுக்கல் மற்றும் பழனி அரசு மருத்துவமனைகளிலும், பழனி, தாடிக்கொம்பு அம்மையநாயக்கனூா் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைபெற்றது. அங்கு மருத்துவத்துறை அதிகாரிகள், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் ஆகியோா் இந்தத் தடுப்பூசியை போட்டுக்கொண்டனா். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்தப் பணியை ஆட்சியா் மு.விஜயலட்சுமி பாா்வையிட்டாா்.

ஒவ்வொரு மையத்திலும் நாளொன்றுக்கு தலா 100 போ் வீதம் மொத்தம் 500 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும், முன்களப் பணியாளா்களான மருத்துவத் துறையைச் சோ்ந்த 95 பேருக்கு சனிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 32 போ், பழனி அரசு மருத்துவமனையில் 22 போ், அம்மையநாயக்கனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 26 போ், தாடிக்கொம்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 12 போ், பழனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.