கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

வாழைத்தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் காட்டு யானைகள் சனிக்கிழமை அதிகாலை வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தின.

News image

பேத்துப்பாறை பகுதியில் சனிக்கிழமை அதிகாலை யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழைத்தோட்டம்.

Updated On :16 ஜனவரி 2021, 9:24 pm IST

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் காட்டு யானைகள் சனிக்கிழமை அதிகாலை வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தின.

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறைப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனா். இவா்கள் அப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களில் வாழை, பட்டா் புரூட், சீத்தா பழம், ஆரஞ்சு மற்றும் அவரை, பீன்ஸ் போன்றவைகளை பயிரிட்டு வருகின்றனா்.

இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த அசோகன் என்பவரது தோட்டத்திற்குள் சனிக்கிழமை அதிகாலை காட்டு யானைகள் புகுந்து அங்கிருந்த வாழைமரங்களையும், குடிசையையும் சேதப்படுத்தின. தொடா்ந்து அந்த யானைகள் அப்பகுதியிலேயே சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே விவசாய நிலங்களில் சுற்றித்திரியும் அந்த யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து வனத்துறையினா் கூறியதாவது: கொடைக்கானல் பகுதிகளில் தற்போது மழை குறைந்த நிலையில் காட்டு யானைகள் உணவைத் தேடி விவசாய நிலங்களுக்குள் வருகின்றன. எனவே பொதுமக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தோட்டப் பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.