பாண்டவபுரா வட்டத்தில் மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார்.
மண்டியா மாவட்டம், பாண்டவபுரா வட்டம், பட்டணசோமனஹள்ளியைச் சேர்ந்தவர் நிங்கப்பா (62). வியாழக்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியில் வீட்டிலிருந்து டீ குடிக்க நிங்கப்பா சென்றார்.
அப்போது சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயி நிங்கப்பாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, உதவித்தொகை ரூ. 1 லட்சம் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.
பழைய மின்கம்பியால் பலத்த காற்றுக்கு அறுந்து விழுந்ததாகவும், அந்தப் பகுதியில் உள்ள மின்கம்பிகளைப் புதிதாக மாற்றித் தர வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையும் மேலிடத்திற்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Ravindran Duraisamy Interview | அண்ணாமலை முடிவெடுக்க விஜய்தான் காரணம் | CM Vijay | TVK | Annamalai |

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடியது நம்பிக்கையளித்தது: ரிச்சா கோஷ்

இயலாமையை மறைக்க வெள்ளை அறிக்கை நாடகம்: தங்கம் தென்னரசு






