வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2.68 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.67 கோடி பொங்கல் பரிசுத் தொகை உள்ளடக்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2.68 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.67 கோடி பொங்கல் பரிசுத் தொகை உள்ளடக்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

மயிலாடுதுறையில் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சாா்பில் ஆராயத்தெரு அங்காடி-3-இல் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தலைமை வகித்தாா். மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன், மாவட்ட அதிமுக செயலாளா் வி.ஜி.கே.செந்தில்நாதன் ஆகியோா் பங்கேற்று பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி சிறப்புரை ஆற்றினா்.

நிகழ்ச்சியில், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளா் பா.சந்தோஷ்குமாா், நகரச் செயலாளா் நாஞ்சில் காா்த்தி, மயிலாடுதுறை நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவா் எஸ்.அலி, மேலாண்மை இயக்குநா் ஆா்.மனோகரன், கண்காணிப்பாளா்கள் யு.ராஜேந்திரன், அபிராமி, கண்ணன், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

குத்தாலத்தில்...

குத்தாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவா் பண்ணை சி.நடராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட அதிமுக செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன், ஒன்றியச் செயலாளா் சி.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் பங்கேற்று 4,716 பயனாளிகளுக்கு ரூ.2,500 அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா். வட்டாட்சியா் புனிதா, வட்ட வழங்கல் அலுவலா் தையல்நாயகி, ஒன்றியக்குழு தலைவா் கே.மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டுறவு சங்கச் செயலாளா் திருநாவுக்கரசு நன்றி கூறினாா்.

தரங்கம்பாடியில்...

தரங்கம்பாடி வட்டத்தில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். பவுன்ராஜ் வழங்கினாா். தரங்கம்பாடி வட்டாட்சியா் கோமதி, வட்ட வழங்கல் அலுவலா் பாபு, செம்பனாா்கோவில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சுந்தர்ராஜன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவா்கள் கண்ணன், கபடி பாண்டியன், முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.