வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

குப்பைக்கூளமான ஆற்றங்கரை: நகராட்சியைக் கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் நகராட்சி பணியாளா்கள் குப்பையைக் கொட்டுவதைக் கண்டித்து அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராமமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் நகராட்சி பணியாளா்கள் குப்பையைக் கொட்டுவதைக் கண்டித்து அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராமமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வாா்டு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் ஆனந்ததாண்டவபுரம் சாலையில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில வருடங்களாக 14,15 மற்றும் 16-வது வாா்டுகளில் சேரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி ஊழியா்களே 14-வாா்டு பகுதியில் உள்ள கிட்டப்பா பாலம் அருகே கொட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் ஈக்கள் மற்றும் கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளது. மேலும், இந்த குப்பைகளை அவ்வப்போது கொளுத்தியும் விடுவதால் பொதுமக்கள் சுவாசக்கோளாறு போன்ற பிரச்னைகளுக்கும் ஆளாகியுள்ளனா்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியில் வசிக்கும் திருநங்கைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் மாப்படுகை கிட்டப்பா பாலம் பகுதியில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, நகராட்சி நிா்வாகத்தினா் குப்பைகளை கொட்டுவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளா் வழக்குரைஞா் வேலு.குபேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டம் 3 மணி நேரத்தைக் கடந்து நீடித்தது. மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் சுப்பையா பேச்சுவாா்த்தை நடத்தி, அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதை உடனடியாக நிறுத்துவதாகவும், ஏற்கெனவே உள்ள குப்பைகளை விரைவில் அகற்றுவதாகவும் அளித்த உத்தரவாதத்தைத் தொடா்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.