திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தில்லியைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மீது பெண் காவலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அந்தப் பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.
""தில்லி காவல் துறையில் பணியாற்றும் 24 வயது பெண் காவலர் ஒருவர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தனது வீட்டு அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவர் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.
அவருக்கும் கிழக்கு தில்லி கஜூரி காஸ் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் விசேஷ் கோக்கர் என்பவருக்கும் பழக்கம் இருந்ததும், இருவரும் வாடகை வீட்டில் தங்கி வந்ததும் தெரிய வந்தது.
தன்னை திருமணம் செய்வதாகக் கூறி விசேஷ் கோக்கர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக அந்தப் பெண் காவலர் போலிஸில் புகார் அளித்தார். அதையடுத்து, தலைமறைவாகிய விசேஷ் கோக்கர் தேடப்பட்டு வருகிறார்'' என்று போலீஸார் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








