தலைநகரை பசுமையாக்க ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும், நடப்படும் மரக்கன்றுகளைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும் தில்லிவாசிகளுக்கு முதல்வர் ஷீலா தீட்சித் வேண்டுகோள் விடுத்தார்.
கோன்ட்லி பகுதியில் ஜல போர்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
அதில் பல்லுயிர் பெருக்க வழிகாட்டியை வெளியிட்டு ஷீலா தீட்தித் பேசியது:
தில்லியில் 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்படுவதால் 22 சதவீதம் பசுமை அதிகரித்துள்ளது, காற்றில் மாசு குறைந்துள்ளது.
தில்லி முழுவதும் 40 இடங்களில் காடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் பசுமைத் தலைநகரமாக தில்லி உருவெடுத்துள்ளது.
தில்லியை மேலும் பசுமையாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கோன்ட்லியில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இவை வளர்ந்து மரங்களாகும் போது கோன்ட்லி பகுதியே பசுமையாகக் காணப்படும்.
மரக்கன்றுகளை நட்டு பராமரித்துவரும் மாணவர்கள், சமூகத்துக்கு முன்னுதாரணமாக உள்ளனர் என்று ஷீலா தீட்சித் கூறினார்.
விழாவில் வேம்பு, மா, நெல்லி, ஆலம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி மாணவர்கள் 300 பேரும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்

விக்ரமின் சியான் 63 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


