தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்துள்ளது.

News image

அரைசதம் விளாசிய மகிழ்ச்சியில் ஸ்மிருதி மந்தனா - படம் | பிசிசிஐ

Updated On :14 ஜூன் 2026, 9:33 pm IST

டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்துள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் எட்ஜ்பேஸ்டனில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 44 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 36 ரன்களும், ரிச்சா கோஷ் 34 ரன்களும் எடுத்தனர். தீப்தி சர்மா 12 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் சாதியா இக்பால் மற்றும் ஃபாத்திமா சனா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தஸ்மியா ருபாப் மற்றும் ரமீன் ஷமீம் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

Summary

Batting first in the T20 World Cup match against Pakistan, the Indian team scored 170 runs for the loss of 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.