தில்லி உயிரியல் பூங்காவிற்கு புது வரவாக மும்பையிலிருந்து "சிவா' என்கிற காண்டாமிருகம் புதன்கிழமை மாலை கொண்டுவரப்பட்டது.
இனப் பெருக்கத்துக்காக மும்பை பைகுலா உயிரியல் பூங்காவில் இருந்து "சிவா' வரவழைக்கப்பட்டுள்ளதாக உயிரியல் பூங்கா வட்டாரங்கள் தெரிவித்தன.
1985-இல், ஆறு வயதிருக்கும்போது அசாமிலிருந்து மும்பை பைகுலா உயிரியல் பூங்காவுக்கு "சிவா' கொண்டு வரப்பட்டது.
அதற்குத் துணையாக ஒரு பெண் காண்டாமிருகத்தை வரவழைக்குமாறு மும்பை உயர் நீதிமன்றமும், தேசிய உயிரியல் பூங்கா ஆணையமும் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு 2004-இல் அறிவுறுத்தின.
அதைத் தொடர்ந்து, பெண் காண்டாமிருகத்தை அழைத்து வருவதற்காக, ஜெர்மனி நாட்டின் தலைநகரமான பெர்லின் உயிரியல் பூங்கா வரை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பலன் கிடைக்கவில்லை. இப்போது "சிவா'வுக்கு 38 வயதாகிவிட்டது.
இந்நிலையில், தில்லி உயிரியல் பூங்காவில் மகேஸ்வரி (18), அஞ்சுகா (8) ஆகிய இரண்டு பெண் காண்டமிருகங்கள் இருப்பதை அவர்கள் அறிந்தனர்.
அதைத் தொடர்ந்து, தில்லி உயிரியல் பூங்கா அதிகாரிகளுடன் மும்பை உயிரியில் பூங்கா அதிகாரிகள் தொடர்பு கொண்டனர்.
தில்லி உயிரியில் பூங்காவில் இரண்டும் பெண் காண்டாமிருகங்களாக இருப்பதால், "சிவா'வை இங்கு கொண்டு வந்தால் இனப்பெருக்கத்துக்கு உதவியாக இருக்கும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, "சிவா'வை அழைத்து வர தில்லி உயிரியில் பூங்கா அதிகாரிகள் குழுவினர் மும்பைக்கு கடந்த 10-ஆம் தேதி புறப்பட்டனர்.
வாகனத்தில் அமைக்கப்பட்ட கூண்டில் "சிவா'வை ஏற்றி தில்லிக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, "சிவா'வை கூண்டில் ஏற்றுவதற்கான முயற்சி கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. ஆனால், 5 நாள்களுக்குப் பிறகுதான் கூண்டுக்குள் ஏற்ற முடிந்தது.
அங்கிருந்து, சாலை வழியாக தில்லிக்கு கடந்த 18-ஆம் தேதி புறப்பட்ட "சிவா'வுடன் புறப்பட்ட அதிகாரிகள் தில்லி உயிரியல் பூங்காவை புதன்கிழமை மாலை வந்தடைந்தனர்.
இது குறித்து, தில்லி உயிரியல் பூங்காவின் மூத்த வனவிலங்கு மருத்துவர் ந. பன்னீர்செல்வம் கூறியது:
தில்லி தேசிய உயிரியில் பூங்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பாக, 6 காண்டமிருகங்கள் இருந்தன. இவற்றில் தற்போது இரண்டு பெண் காண்டமிருகங்கள் மட்டும்தான் உள்ளன. எந்தவிதப் பிரச்னையும் இன்றி "சிவா'வை அழைத்து வந்திருக்கிறோம்.
ஒரு மாதம் "சிவா' தீவிரமாக கண்காணிக்கப்படும். இங்குள்ள சூழலில் பழக்கப்பட்ட பிறகு, பெண் காண்டமிருகங்களுடன் "சிவா' சேர்ந்து இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் மீது ரஜினிக்கு பொறாமையா? லதா ரஜினிகாந்த் விளக்கம்!

பெய்ரூட்டில் அருகே இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

கடைசி ஒருநாள்: கூப்பர் கானலி அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் ஆஸி. த்ரில் வெற்றி!

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


