தில்லியில் உள்ள உருது வழிப் பள்ளிகளில் உருது மொழிக்கு நிரந்தர ஆசிரியர் இல்லாத நிலை உள்ளது.
உருது கற்பிக்க தாற்காலிக அடிப்படையில் 115 ஆசிரியர்கள் கடைசியாக 1989-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். அவர்கள் இதுவரை தாற்காலிக ஆசிரியர்களாகவே பணியாற்றுகின்றனர்.
தில்லி அரசின் இரண்டாவது அலுவல் மொழிகளில் உருதும் ஒன்றாக உள்ளது. தில்லியில் உருது மொழி பேசுவோர் அதிகம். ஆனால், உருது மொழி கற்பிக்க 23 ஆண்டுகளாக நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், உருது வழிப் பள்ளிகளில் 200 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தில்லி அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. ஆனால், அறிவித்தபடி, உருது ஆசிரியர்கள் பணியமர்த்தப்படவில்லை.
இது தொடர்பாக, உருது அகாதெமியின் துணைத் தலைவர் பேராசிரியர் அக்த்ருல்
வாúஸ கூறியது:
தில்லி மாநகராட்சிகளின் கீழ் 84 உருது தொடக்கப் பள்ளிகளும், தில்லி கல்வித் துறை இயக்ககத்தின் கீழ் 22 உயர்நிலை உருதுப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், ஐ.ஏ.எஸ்.இ. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் உருது ஆசியர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த நிறுவனங்களில் பயிற்சி பெற்ற ஆசியர்களைக் கொண்டு காலியாக உள்ள பணியிடங்களைப் பூர்த்தி செய்ய தில்லி அரசுக்கு கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதினேன்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற உருது ஆசிரியர்களையும் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
தில்லி கல்வித் துறை அமைச்சர் கிரண் வாலியா கூறுகையில், "உருது வழிப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக விரைவில் அறிவிக்கை வெளியிடப்படும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்

விக்ரமின் சியான் 63 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


