தில்லியில் கடந்த பல நாள்களாக அதிகரித்துவந்த வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது.
தில்லி காஜிபூர் உள்ளிட்ட முக்கிய மண்டிகளில் வெங்காய வரத்து அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
அண்டை மாநிலங்களில் பெய்துவந்த தொடர் மழை காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதனால், தில்லியில் வெங்காயத்துக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டு கிலோ ரூ. 80 என்ற அளவுக்கு விலை உயர்ந்தது. வெங்காய விலை உயர்வுக்கு எதிராக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தின.
வெங்காய விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தணிக்கும் வகையில், 1,000 இடங்களில் வெங்காய விற்பனைக் கடைகளை தில்லி அரசு திறந்தது.
அக்கடைகளில் வெங்காயம் கிலோ ரூ. 40 என விற்கப்படுகிறது. வெங்காய விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று அரசு தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தில்லியின் பிரதான காய்கறிச் சந்தையான காஜிபூரில் வெங்காய வரத்து கடந்த இரு தினங்களாக அதிகரித்துள்ளது குறித்து, அந்த மண்டியின் அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "செவ்வாய்க்கிழமை மட்டும் வெங்காய வரத்து 2,700 டன்னாக அதிகரித்துள்ளது.
சில குடியிருப்புப் பகுதிகளில் சில்லறைக் கடைகளில் சற்று கூடுதல் விலையில் வெங்காயம் விற்கப்படுகிறது. கிழக்கு தில்லியில் அரசு சார்பில் 150 இடங்களில் தாற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டு ராஜஸ்தான் வெங்காயம் கிலோ ரூ.35-க்கும், மகராஷ்டிரா வெங்காயம் ரூ. 49-க்கும் விற்கப்பட்டது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்

டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!

சிஜேபி நடத்தும் போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு - புகைப்படங்கள்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


