புவனேசுவரம் ரசூல்கரில் உள்ள சபர் சாஹி பகுதியில் உள்ள தனது வீட்டில் நிதி நிறுவன பெண் அதிபரான பச்சன்சுதா பட்நாயக் (55) புதன்கிழமை நண்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்று தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை கேபிடல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
வீட்டில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரைக் கடுமையாகத் தாக்கி கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளதாக போலீஸார் கூறினர். புவனேசுவரத்தில் மதுகான் நிதி நிறுவனத்தை பச்சன்சுதா நடத்தி வந்தார். அவரை வெளியாட்கள் கொன்றிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டவரின் கணவர் மதுசரண் பட்நாயக் வேறுவிதமாக கூறினார். இந்த படுகொலையில் காலை வேளையில் பணியில் இருந்த பாதுகாவலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று மதுசரண் சந்தேகம் தெரிவித்தார்.
சம்பவத்துக்குப் பிறகு அந்த பாதுகாவலர் தலைமறைவாகிவிட்டதாகவும் அவரை தேடி வருவதாகவும் அதிகாரி குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


