ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஏழை பக்தர்களுக்கு எதிரான அரசியல்

விளம்பரத்தின் மூலம் உற்பத்தியைச் சந்தையில் பிரபலப்படுத்தி, வாடிக்கையாளர்களைத் தன்வசப்படுத்தி, வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வதென்பது இன்றைய நவீன உலகில் பெரிய கலை. பொருள்களின் தரம் சற்றுக் குறைவாக இருப்

Updated On :20 செப்டம்பர் 2012, 12:54 am

விளம்பரத்தின் மூலம் உற்பத்தியைச் சந்தையில் பிரபலப்படுத்தி, வாடிக்கையாளர்களைத் தன்வசப்படுத்தி, வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வதென்பது இன்றைய நவீன உலகில் பெரிய கலை. பொருள்களின் தரம் சற்றுக் குறைவாக இருப்பினும், தங்களது அபிமான சினிமா நட்சத்திரங்களோ அல்லது விளையாட்டு வீரர்களோ விளம்பரத்தில் தோன்றும்பட்சத்தில் அந்தக் குறிப்பிட்ட பொருள் சந்தையில் நன்றாகவே விற்பனையாகிறது.

ஆக விளம்பரங்களின் பயன் இதுமட்டும்தானா என்றால் இல்லை. மற்றொன்றும் இருக்கிறது.

எதையாவது செய்து, எதையாவது பேசி, அதன்மூலம் ஒரு விளம்பரத்தைத் தேடிக்கொண்டு தன்னைத்தானே பிரபலமாக்கிக்கொள்வது சமீபகாலத்தில் அதிகமாகவே காணப்படுகிறது.

திருப்பதி திருமலை கோயில் காணிக்கையை திருப்பதி ரயில் நிலைய மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாமென ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. அதுகூடாதென ஆந்திர மாநில பாஜக செய்தித்தொடர்பாளர் பானுபிரகாஷ் ரெட்டி அம் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். திருமலை கோயிலுக்குப் பக்தர்களால் அளிக்கப்படும் காணிக்கையைப் பக்தர்கள் நலனுக்கும், கோயில் மேம்பாட்டுக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதும் ஏனைய பிற காரியங்களுக்குப் பயன்படுத்துவது இந்து சமய அறநிலையத்துறை சட்டத்துக்குப் புறம்பானது என்பதும் அவருடைய வாதம்.

திருப்பதிக்கு வரும் ரயில் பயணிகளில் சொற்பமான உள்ளூர்வாசிகளைத் தவிர, அனைவரும் அப்பாவி ஏழை பக்தர்களே. ஏழுமலையானைத் தரிசிக்க தொழிலதிபர்களும், சினிமா நட்சத்திரங்களும், அரசியல்வாதிகளும் ரயில்களில் வருவதும் இல்லை. நீண்ட வரிசையில் நிற்பதும் இல்லை.

திருமலையில் உள்ளது போன்று விசாலமான தங்கும் மண்டபங்கள் திருப்பதி ரயில் நிலையத்திலும் அமைக்கப்பட்டு, ஏனைய பிற அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டால், கோடை, மழைக்காலங்களிலும், விசேஷ நாள்களிலும், ரயில்கள் சற்று தாமதமானாலும் ஏழை பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும்.

காலையில் கண்விழித்தது முதல் இரவு தூங்கச்செல்லும் வரை ஊழல், ஊழல் என்று நித்தம் ஓர் ஊழல் அம்பலப்படுத்தப்பட்டு, வாக்களித்தவனின் நிம்மதிக்கு வேட்டு வைக்கும் வகையில் மத்திய, மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கை இருந்து வருகிறது. எங்கேயாவது சென்றால் சற்று நிம்மதி கிடைக்காதா? அது கோயிலுக்குப் போனாலாவது நிம்மதி கிடைக்குமா என்று நினைத்து கோயிலுக்குச் சென்றால் அங்கு வந்தும் அரசியல்வாதிகள் வறட்டு விளம்பரத்தைத் தேடிக்கொள்வது ஏழை பக்தர்களுக்கு எரிச்சலூட்டுவதாகவே இருக்கிறது.

வெளிமாநிலங்களில் இருந்து பயணிகள் ரயில் மூலம் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானைத் தரிசித்துவிட்டு திரும்பவும் பயணிகள் ரயில் மூலமாகவே ஊர் போய்ச் சேர்ந்தால்தான் தெரியும், திருப்பதிக்கு வந்துசெல்லும் ஏழை பக்தர்கள் படும்பாடு.

திருமலையில் உள்ள புராதன மணிமண்டபத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிதாக மணிமண்டபம் கட்டப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து மற்றொரு வழக்கும் தாக்கல் செய்யப்படப் போவதாகக் கூறப்படுகிறது. விசேஷ நாள்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் மணி மண்டபத்தை இடிப்பது பக்தர்களுக்குப் பெரும் இடையூறாக இருக்கும் என காரணம் கூறப்படுகிறது.

திருமலையில் விசேஷ காலங்களில் மட்டுமல்ல, எப்பொழுதும் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே காணப்படும். இந்த வழக்குத் தொடுப்பதற்கு முன்பாக இரு சம்பவங்களை சற்று நினைவுகூர வேண்டும்.

சமீபத்தில் சபரிமலையில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 102 பக்தர்கள் உயிரிழந்தது. மற்றொன்று சரிவர புனரமைக்கப்படாததால் காளஹஸ்தி கோயில் கோபுரம் இடிந்து விழுந்தது. தகுந்த முன்னேற்பாட்டுடன் புராதன மணிமண்டபம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிதாக மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.