வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இ.பி.கோ. 377 : வரமா; சாபமா?

ஓருபால் ஈர்ப்பு, திருநங்கைகள், திருநம்பிகள் போன்ற பால் சிறுபான்மையினர் தங்களின் ஒற்றுமையையும் கோரிக்கைகளையும் தாம் வாழும் சமூகத்தினருக்குத் தெரியப்படுத்தும் வகையில் வானவில் பேரணியை சமீபத்தில் நடத்தினர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:53 am

ரவிக்குமார்

ஓருபால் ஈர்ப்பு, திருநங்கைகள், திருநம்பிகள் போன்ற பால் சிறுபான்மையினர் தங்களின் ஒற்றுமையையும் கோரிக்கைகளையும் தாம் வாழும் சமூகத்தினருக்குத் தெரியப்படுத்தும் வகையில் வானவில் பேரணியை சமீபத்தில் நடத்தினர்.

எதற்காக இந்தக் கொண்டாட்டம்?

ஒருபால் ஈர்ப்புள்ளவர்களின் மனித உரிமையைக் காக்கவேண்டியும் அவர்களின் உறவை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டியும் "நாஸ் அறக்கட்டளை' என்னும் தன்னார்வ அமைப்பு, மனித உரிமைகளைப் பறிக்கும் இ.பி.கோ.வின் 377-வது சட்டப்பிரிவை நீக்கக் கோரி இந்திய அரசாங்கத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் கடந்த 2009-ல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. தனிப்பட்ட இடத்தில், வயது வந்த இருவரின் ஒருபால் ஈர்ப்பு சட்டப்பூர்வமாக சரியானது என்பதுதான் அந்தத் தீர்ப்பின் சாராம்சம்.

இந்தத் தீர்ப்பை வரவேற்கும் விதமாக மூன்றாவது ஆண்டாக பால் சிறுபான்மையினரின் இந்தப் பேரணி நடைபெற்றது. நாஸ் அறக்கட்டளையோடு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பும் இணைந்து, இ.பி.கோ. 377-வது சட்டப்பிரிவை முழுமையாக நீக்கவேண்டும் என்ற வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நாடாளுமன்றத்தில் மனித உரிமைகளுக்கு எதிரான இந்தச் சட்டப் பிரிவை நீக்குவதற்கான சட்ட வரைவைக் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கையை முன்னிறுத்தியும் இந்தப் பேரணி நடந்திருக்கிறது.

மேற்சொன்ன கோரிக்கையோடு, ""இந்த உலகில் நாங்கள் வித்தியாசமான பிறவிகள் இல்லை. எதிர்பால் ஈர்ப்போடு ஒருவர் இருப்பதைப் போன்றதுதான் ஒருபால் ஈர்ப்போடு ஒருவர் இருப்பதும். ஆணின் உடலுக்குள் பெண்ணின் மனதோடு இருப்பவர்களும், பெண்ணின் உடலுக்குள் ஆணின் மனதோடு இருப்பவர்களும் கூட இந்தச் சமூகத்தில் ஓர் அங்கமே. எங்களுக்கும் இந்தச் சமூகத்தில் வாழ உரிமை இருக்கிறது.

எங்களைப் புரிந்துகொள்ளுங்கள். குடும்பங்களினாலும் உற்றார் உறவினர்களாலும் சமூகத்தாலும் எங்களைத் தனிமைப்படுத்தாதீர்கள். இந்த நிலைகள் இயற்கைக்கு மாறானது அல்ல. மருத்துவ ரீதியாக ஒருபால் ஈர்ப்புள்ளவர்களை மாற்றுகிறேன் பேர்வழி என்று ஒருவருக்கு, மின் அதிர்ச்சி சிகிச்சைகள் எல்லாம் அளிப்பதை நிறுத்துங்கள். இது ஒரு நோய் அல்ல...'' இதுபோன்ற கோரிக்கைகளை கோஷமிட்டும் அட்டைகளில் எழுதியும் தங்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தது அந்தப் பேரணி.

""பால் சிறுபான்மையினரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாததால், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.ஆர். சிராஸ் முதல் சாமான்யவர்கள் வரை பலரின் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒருபால் ஈர்ப்புள்ள 13 பெண்களின் மரணங்கள் ஹைதராபாதில் நிகழ்ந்திருக்கின்றன. குடும்பங்களின் கட்டாயத்தால் பல திருமணங்கள் முறிந்திருக்கின்றன. பல திருமண உறவுகள் நீதிமன்றத்தில் வழக்குக்காகக் காத்திருக்கின்றன...'' என்கின்றனர் பால் சிறுபான்மை ஆதரவாளர்கள்.

இதுஒருபுறம் இருக்க, மனித உரிமைகளுக்கு எதிரான இ.பி.கோ. 377-வது சட்டப் பிரிவுதான், பால்மணம் மாறாத குழந்தைகளுக்குப் பாதுகாப்பாகவும் இருக்கிறது என்பதை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் வெளிப்படுத்தியிருக்கிறது.

ஒருபால் ஈர்ப்பை தண்டனைக்குரிய குற்றத்திலிருந்து விடுவித்திருக்கும் உயர் நீதிமன்றம், அதேநேரத்தில், பொது இடத்திலும், 18 வயது நிரம்பாத குழந்தைகளோடும் அவர்களின் விருப்பத்தோடோ, விருப்பம் இல்லாமலோ உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என்பதை வலியுறுத்துகிறது.

அது என்ன இ.பி.கோ. 377-வது சட்டப் பிரிவு? அந்தச் சட்டப் பிரிவு என்ன கூறுகிறது?

""எவர் ஒருவர் இயற்கைக்கு மாறாக ஆண், பெண், விலங்குகளுடன் உடல் உறவு கொள்கிறாரோ அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டு வரை சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும்.'' இயற்கைக்கு மாறாக எந்தவித உடல் உறவு கொண்டாலும் இந்தச் சட்டப்படி அது குற்றம்.

பால் சிறுபான்மையினருக்கு மனித உரிமையைப் பறிக்கும் சட்டமாக இ.பி.கோ. 377 இருக்கிறதென்றால், வயது வராத பச்சிளம் குழந்தைகளின் மனித உரிமைகளைக் காக்கும் சட்டமாகவும் அதே சட்டப் பிரிவு இருக்கிறது. இ.பி.கோ.377... வரமா? சாபமா? உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.