இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

இனி நல்லதாக நடக்கட்டும்

செய்தி ஊடகங்கள் ஏன் இல்லாத ஒரு மோதலை இருப்பதைப்போல சித்திரிக்கின்றன, பிறகு அதற்கொரு தீர்வையும் கூறுகின்றன, அரசு நடவடிக்கை எடுத்ததற்குப் பிறகு - அந்த நடவடிக்கை தங்களால்தான் எடுக்கப்பட்டது என்று மார் தட்டுகின்றன'' என்று எனக்குப் புரியவே இல்லை.

Updated On :20 மே 2013, 1:56 am IST

செய்தி ஊடகங்கள் ஏன் இல்லாத ஒரு மோதலை இருப்பதைப்போல சித்திரிக்கின்றன, பிறகு அதற்கொரு தீர்வையும் கூறுகின்றன, அரசு நடவடிக்கை எடுத்ததற்குப் பிறகு - அந்த நடவடிக்கை தங்களால்தான் எடுக்கப்பட்டது என்று மார் தட்டுகின்றன'' என்று எனக்குப் புரியவே இல்லை.

பாகிஸ்தானில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயக முயற்சிகளுக்குப் பெரும் வெற்றி. ஜனநாயகத்துக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ள பாகிஸ்தான் மக்கள் பாராட்டுக்குரியவர்கள். பழைய வரலாற்றையெல்லாம் கிளறி இன்னமும் ஏன் நாம் திகிலூட்டிக்கொண்டே இருக்க வேண்டும்? புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறுப்பேற்று நாட்டின் நிர்வாகத்தைச் செம்மைப்படுத்த சிறிது அவகாசம் அளிப்போம்.

புதிதாகப் பிரதமர் பொறுப்பேற்றுள்ள நவாஸ் ஷெரீஃப், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுத்துள்ளதும் அதை ஏற்ற மன்மோகன் சிங், அவருக்குப் பதிலுக்கு அழைப்பு விடுத்ததும் சரியான சமிக்ஞைகளே.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா ஆகியோரும் பாகிஸ்தானில் நடந்துள்ள ஆட்சி மாற்றத்தைச் சரியான முறையில் வரவேற்றுள்ளனர்.

******************************************

நம்முடைய அமைப்பில், யார் அளவுக்கு மீறி செயல்பட்டாலும் அதை மக்கள் சகித்துக்கொள்வதில்லை. நாட்டின் நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் நாடாளுமன்றம், நீதித்துறை, அரசு நிர்வாகம் ஆகிய மூன்றும் தத்தமது வரம்புக்குள் செயல்படுவதே நல்லது.

அரசியல் தலைவர்கள் வரம்புமீறிச் செயல்பட்டால் வாக்காளர்கள் பொதுத் தேர்தலில் உடனடியாக தண்டனை வழங்கிவிடுகிறார்கள்.

நீதித்துறையில் ஏதேனும் அத்துமீறல்கள் இருந்தால் உடனே நாடெங்கிலும் கூக்குரல் எழுந்துவிடும்; நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை அவசியம், நீதித்துறை தன்னுடைய செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும்.

அத்துடன் தன்னுடைய வரம்பை மீறி வேறு துறைகளின் செயல்களில் நீதித்துறை தலையிடக்கூடாது என்பதும் வெவ்வேறு வகைகளில் வலியுறுத்தப்படும்.

எல்லா துறைகளிலும் நல்லவர்கள், சுமாரானவர்கள், தீயவர்கள் இருக்கிறார்கள். எந்தவொரு சீர்திருத்தமும் இம் மூன்று துறைகளிலும் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களால் வரவேற்கப்படும். எல்லோருமே சட்டப்படியான ஆட்சிதான் நடக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.

சுயநல சக்திகள் விலக்கப்பட்டால் நாடாளுமன்றம், நீதித்துறை, அரசு நிர்வாகம் ஆகிய மூன்றிலுமே சீர்திருத்த நடவடிக்கைகளை அவரவர்களே எடுப்பதைக் காண முடியும்.

ஆட்சி நிர்வாகத்தின் மூன்று துறைகளும் சம பல நிலையிலும், ஒன்றில் ஒன்று தலையிடாமலும் செயல்படுவது உறுதி செய்யப்படாவிட்டால் அரசின் செயல்பாட்டில் "நிலைத்தன்மை' இல்லாமல் போய்விடும்.

******************************************

நேருக்கடியான சந்தர்ப்பங்களில் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் முன் முயற்சி எடுத்து சில நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். கீழமை நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் குறித்து உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றங்களிலும் சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன. கீழமை நீதிமன்றங்களின் நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தவும் நீதி விசாரணை விரைவாகவும் பயனுள்ள வகையிலும் நடைபெறவும் நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். வழக்குகள் தேங்குவதால் பொதுமக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது.

******************************************

உலகம் மாறிவருகிறது. நாம் அடுத்த அடியை மிகவும் எச்சரிக்கையாக எடுத்துவைக்க வேண்டும். ஆட்சியில் இருக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால், முடிவெடுக்கும் இடத்தில் உள்ள ஒருசில பேர்களுக்கு இந்த நாட்டில் உள்ள அறிவாளிகள் அனைவருக்கும் உள்ள புத்திசாலித்தனத்துக்கு ஈடான திறமையும் அனுபவமும் இருக்கும் என்று கூறிவிட முடியாது. நம் மக்களைச் செம்மறி ஆட்டுக்கூட்டம் என்று கேலியாக சிலர் அழைத்தாலும் நெருக்கடி என்று வரும்போது நம் மக்கள் எடுக்கும் ஒட்டுமொத்த முடிவு நாட்டு நலன் கருதியதாகவே இருந்துவருகிறது. நம் நாட்டில் இப்போது நெருக்கடி ஏதும் இல்லை, ஆனால் நாம் செயற்கையாக, ஒவ்வொன்றாக உருவாக்கி வருகிறோம். மற்றவர்களைவிட தான் புத்திசாலி என்பதை நிரூபிக்க ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் அறிக்கை வெளியிட்டும் பேட்டி அளித்தும் விவாதங்களில் பங்கேற்றும் கருத்து சொல்லி வருகிறோம்.

******************************************

அரசியல் கட்சிகள் மக்களவை பொதுத் தேர்தலுக்கு தயாராகிவருகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் இருந்த அரசியல் நிலைமை இப்போது மாறியிருக்கிறது. இமாசலப் பிரதேசத்தை அடுத்து கர்நாடகத்திலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. குஜராத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நரேந்திர மோடியால் மக்களவைப் பொதுத் தேர்தலில் கடந்த முறை வென்ற 16 தொகுதிகளைவிட மேலும் சில தொகுதிகளை வேண்டுமானால் கைப்பற்ற முடியும். ஆனால் கர்நாடகத்திலும் இமாசலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் இந்த முறை கிடைக்கப்போகிறதே?

நாம் சொல்லும்போதெல்லாம் பாரதிய ஜனதா கட்சி அதை மறுத்துக்கொண்டே இருக்கும், ஆனால் அந்தக் கட்சியின் தலைமைக்குள் ஒற்றுமை இல்லை, தெளிவில்லை என்பது உண்மை. கர்நாடகமே அதற்கு நல்ல உதாரணம். கர்நாடகத்தில் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை என்ன என்று தில்லியில் உள்ள தேசியத் தலைமைக்குத் தெரியும்; ஆனால் உரிய காலத்தில் உரிய நடவடிக்கையை அதனால் எடுக்க முடியவில்லை. இத்தனை கோளாறுகளுக்குப் பிறகும் கர்நாடகத்தில் தங்களுக்கு மிகப்பெரிய சரிவு ஏற்படாது என்று கட்சித் தலைமை நம்பியது! ஆனால் கர்நாடக வாக்காளர்களோ அப்படியே தங்களுடைய ஆதரவை காங்கிரஸ் கட்சி பக்கம் திருப்பிவிட்டனர்.

சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு கர்நாடகத்தில் எத்தனை சுமுகமாக முதலமைச்சர் தேர்வும், அமைச்சர்கள் தெரிவும், ஆட்சிப் பொறுப்பேற்றலும் நடைபெற்றது என்பதைப் பாருங்கள்.

அடுத்த மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு மேலும் பல தொகுதிகளில் வெற்றி நிச்சயம் என்று இப்போது கருதுகிறேன். எனவே 130 முதல் 140 தொகுதிகளில் அந்தக் கூட்டணி வெற்றிபெறும். பாரதிய ஜனதா கூட்டணிக்கு 120 முதல் 125 தொகுதிகள் வரையில் கிடைக்கலாம். நான் அடிக்கடி கூறி வருகிறபடி மாநிலக் கட்சிகளுக்கு 250 முதல் 275 தொகுதிகள் வரையில் கிடைக்கும்.

எல்லா மாநிலக் கட்சிகளுமே கூட்டணிக்காக காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதாவின் அழைப்புக்காகக் காத்திருக்கின்றன. அ.இ.அ.தி.மு.க மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் கூட்டணியைத் தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடியில் உள்ளன.

******************************************

தேர்தலைச் சந்திக்கும் நிலையில்தான் காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டுமே உள்ளன. பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான பாரதிய யுவ மோர்ச்சாவுக்கு இணையாக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் பேரணியும் தில்லியில் அமைந்தது. இரண்டுக்குமே நல்ல கூட்டம். இரண்டிலுமே இளைஞர்கள் போலீஸôரின் தடுப்பைத் தகர்ப்பதில் நல்ல வேகம் காட்டினார்கள். இரண்டிலுமே போலீஸôர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத்தான் கூட்டத்தைக் கலைக்க வேண்டியிருந்தது!

ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே சிந்தியாவின் தீவிர முயற்சியால் பாரதிய ஜனதா சுறுசுறுப்படைந்துள்ளது. இப்போதைக்கு களத்தில் அந்தக் கட்சி மூக்கை நீட்டி முந்திக் கொண்டிருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க காங்கிரஸ் கட்சியும் வேகம் பெற்று பாரதிய ஜனதாவுக்கு அதிக இடங்கள் கிடைக்காமல் தடுக்கப் பார்க்கும்.

ராஜஸ்தானில் மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸýக்கு 20 தொகுதிகளும் பாரதிய ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் கிடைத்தன.

மத்தியப் பிரதேசத்தில் மக்களவை பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

சத்தீஸ்கரில் 11 தொகுதிகளில் 10 பாரதிய ஜனதா வசமானது.

தில்லியில் 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றது.

இப்போது காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு இந்த முறை 10 முதல் 15 தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்கக்கூடும்.

******

அரசியல் யுத்தம் நாட்டின் வெவ்வேறு மாநிலங்களின் களங்களிலும் இப்போது தொடங்கியிருக்கிறது. பிகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மிகப்பெரிய பேரணியை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் ஹெüரா மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலிலும் பஞ்சாயத்துத் தேர்தலிலும் அடைந்த தோல்வியைச் சரிக்கட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி முயற்சி செய்வார். இடதுசாரி முன்னணி ஒரு அங்குலத்தையும் விட்டுக்கொடுக்காமல் போரிடும். எல்லா பக்கங்களிலிருந்தும் திரிணமூல் ஆட்சி மீது கணைகள் பாயும்.

பத்திரிகைகள், சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகளின் செய்தி சேனல்கள் என்று எல்லா தரப்பிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துவிடும். எந்தக் கட்சியைத் தேர்வு செய்வது என்பதைத் தீர்மானிப்பதில் சாமான்ய வாக்காளருக்கு இந்த முறை குழப்பமே நேரிடாது. எல்லா அரசியல் கட்சிகளின் நன்மை, தீமைகள் அந்த அளவுக்கு பொதுவில் அலசப்பட்டுவிடும்.

வாக்காளர் எப்படி முடிவெடுப்பார் என்று எனக்குத் தெரியும் என்றுதான் எல்லா பண்டிதர்களும் கூறுகிறார்கள். இருப்பது ஒரு வோட்டு; இதை வைத்துத்தான் நாம் நமக்கான நல்லரசைத் தேர்வுசெய்ய வேண்டும் என்பதுதான் இந்த அமைப்பில் உள்ள சிறப்பம்சமே!

கட்டுரையாளர்: அரசியல் விமர்சகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.