தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வங்கித் துறையை வலுப்படுத்த...

ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்தில், பாரதப் பிரதமர், நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகியோர் கலந்து கொண்ட வங்கித் தலைவர்களின் மாநாட்டை இந்தியப் பொருளாதாரத் துறையின் மிகப்பெரிய நிகழ்வு எனலாம்.

News image
Updated On :7 ஜனவரி 2015, 8:29 pm

எஸ். கோபாலகிருஷ்ணன்

ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்தில், பாரதப் பிரதமர், நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகியோர் கலந்து கொண்ட வங்கித் தலைவர்களின் மாநாட்டை இந்தியப் பொருளாதாரத் துறையின் மிகப்பெரிய நிகழ்வு எனலாம்.

"யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே' என்பதுபோல், வங்கித் துறையில் வரவிருக்கும் சீர்திருத்தங்களுக்கும் மாற்றங்களுக்கும் முன்னோடியாக இந்த மாநாடு நடந்துள்ளது.

இந்த மாநாட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசுகையில், "நாட்டில் 27 பொதுத் துறை வங்கிகள் உள்ளன. ஒட்டுமொத்த வங்கிப் பணிகளில் 70 சதவீதத்துக்கு மேல் இந்த வங்கிகள்தான் கையாளுகின்றன. எனவே, பொதுத் துறை வங்கிகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளைக் களைய வேண்டியது மிகவும் அவசியம். அதற்கான தீர்வுகளை இந்த மாநாடு கண்டறிய வேண்டும்' என்றார். இதிலிருந்து இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என்ன என்பது தெளிவாகிறது.

வாராக்கடன் என்பது வங்கிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் என்பது வெளிப்படை. கடந்த செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்த முதல் அரையாண்டில், பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் 4.5 சதவீதமாக இருந்தது.

கொடுக்கப்பட்ட கடன்களைத் திரும்பப் பெறுவதில் தனியார் வங்கிகளை ஒப்பிடும்போது பொதுத் துறை வங்கிகள் பின்தங்கியுள்ளன என்பதை ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டிக் கூறினார் நிதி அமைச்சர். அதேநேரம், உள் கட்டமைப்பு, உற்பத்தித் துறை, தொழில் முதலீடுகள் ஆகியவற்றுக்கு வங்கிகள் பெரிய அளவில் கடன் கொடுக்க வேண்டி உள்ளது.

இதைக் கருத்தில்கொண்டு, "கடன் வழங்குதல், அலுவலர் தேர்வு உள்ளிட்ட பல விஷயங்களில் பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகளுக்குக் கூடுதல் சுதந்திரம் தர மத்திய அரசு தயாராக உள்ளது' என்று குறிப்பிட்டார் நிதி அமைச்சர்.

மாநாட்டு இறுதியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்னும் ஒரு படி மேலே போய், "பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகளில் அரசியல் தலையீடுகளை பிரதமர் அலுவலகம் அனுமதிக்காது' என்று உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், "பொதுமக்களின் நலன் கருதி செயல்படுத்தப்படும் திட்டங்களில், வங்கிகள் முனைப்பு கொள்ளும் வகையில் மத்திய அரசு குறுக்கிடுவதைத் தவிர்க்க முடியாது' என்றும் கூறியுள்ளார்.

"உலகின் தலைசிறந்த வங்கிகளின் பட்டியலில் ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் வங்கிகள் இடம் பெற்றுள்ளதைப் போல. இந்திய வங்கிகளும் உலக அளவில் உயர வேண்டும்' என்று பிரதமர் வலியுறுத்தியதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த மாநாட்டில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், "வாராக்கடன்களை ஓராண்டுக்குள் சரி செய்திட வேண்டும்' என்கிற தன் கருத்தைத் தெளிவுபடுத்தினார்.

இது ஒருபுறம் இருக்க, மாநாட்டின் முடிவில், வங்கிகளின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த அறிக்கையை, ரிசர்வ் வங்கி ஆளுநரையும் நிதி அமைச்சரையும் கலந்தாலோசித்த பிறகு வங்கித் தலைவர்கள் பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

வங்கித் தலைவர்களால் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என்னென்ன என்று பார்த்தால், எல்லாரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, தொழில் மேம்பாட்டை வங்கித் துறையில் பயன்படுத்திக் கொள்ளுதல், கடன் கொடுக்கும்போது ஏற்படும் "ரிஸ்க்'கை கட்டுக்குள் வைத்தல், "கன்ஸாலிடேஷன்' மற்றும் பொதுத் துறை வங்கிகளின் அமைப்பு ரீதியான மாற்றங்கள், நிர்வாகம் மற்றும் மூலதன மேம்பாடு (இர்ய்ள்ர்ப்ண்க்ஹற்ண்ர்ய் & தங்ள்ற்ழ்ன்ஸ்ரீற்ன்ழ்ண்ய்ஞ் ச்ர்ழ் க்ஷங்ற்ற்ங்ழ் ங்ச்ச்ண்ஸ்ரீண்ங்ய்ஸ்ரீஹ், ஞ்ர்ஸ்ங்ழ்ய்ஹய்ஸ்ரீங் & இஹல்ண்ற்ஹப் ங்ச்ச்ண்ஸ்ரீண்ங்ய்ஸ்ரீஹ்) ஆகியவை ஆகும்.

இவை தவிர, சிறு வங்கிகளை பெரு வங்கிகளோடு இணைப்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசுடைமை வங்கிகளை ஏழு பெரும் வங்கிகளாக இணைப்பதே மத்திய அரசின் குறிக்கோள் என்று தெரிகிறது.

"வங்கிகள் இணைப்பு பற்றிய பேச்சுகள் கடந்த 20 ஆண்டுகளாகவே நடைபெறுகின்றன. வங்கிகளை இணைப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றிய தெளிவான பார்வை அரசுக்கே இல்லை என்பதுதான் உண்மை' என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (அஐஆஉஅ) பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாச்சலம் கூறுகிறார். வங்கிகளின் இணைப்புக்கு வங்கி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்பது நாம் அறிந்ததே.

"கன்ஸாலிடேஷன்' என்பது வேலைவாய்ப்பைக் குறைக்கும் என்பது வங்கித் துறை சார்ந்த நிபுணர்களின் கருத்து. சிறு வங்கிகள் பெரு வங்கிகளுடன் இணைக்கப்படுவதை, பெரு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் வரவேற்பதில்லை.

பெரிய வங்கிகளின் செயல்பாடுகளும் நிதி மேலாண்மையும் இதனால் பாதிக்கப்படும் என்ற கருத்தை முன் வைக்கிறார்கள். சிறிய வங்கிகளைப் பொருத்தவரை, அவற்றின் ஊழியர்கள், "வேண்டாத விருந்தாளி'களைப்போல் உணருகிறார்கள்.

கடைசியாக வந்துள்ள தகவல்களின்படி புணே மாநாட்டில் இணைப்பு பற்றிய விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. எனவே, இப்போதைக்கு வங்கிகள் இணைப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே சொல்லலாம்.

வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் ஊழியர் சங்கங்களுக்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை முடிவு எட்டப்படவில்லை.

நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்ட மாற்றங்களில் சில உடனடியாக நிர்வாகத் துறையில் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

உதாரணமாக, வங்கிகள் 1969-ஆம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்டன. அப்போதிலிருந்து, வங்கித் தலைவர் (இட்ஹண்ழ்ம்ஹய்), மேலாண் இயக்குநர் (ஙஹய்ஹஞ்ண்ய்ஞ் ஈண்ழ்ங்ஸ்ரீற்ர்ழ்) ஆகிய இரண்டு பொறுப்புகளும் ஒருவரிடமே இருந்தன. இப்போது இந்த இரண்டு பொறுப்புகளையும் தனித்தனியே இரண்டு பேர் வகிப்பார்கள் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஓரளவுக்கு இந்தப் புதிய முறை செயல்படத் தொடங்கிவிட்டது. இதனால், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை கூடுதலாகும். அதிகாரக் குவியல் தவிர்க்கப்படும். நிர்வாகத் திறமை மேம்படும் என்று எதிர்பார்க்கலாம்.

அதே சமயம், மத்திய அரசின் அமைச்சக அதிகாரத்துக்கு உள்படாமல், நிபுணர்களைக் கொண்ட உயர் நிலைக் குழு அல்லது வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டே இந்த நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்கிற பரிந்துரை அரசால் இன்னும் ஏற்கப்படவில்லை.

இத்தகையப் பொறுப்புகளுக்கு நியமனம் செய்யும்போது, கால வரையறை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிற பரிந்துரையும் இதுவரை ஏற்கப்படவில்லை.

தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது அரசுடைமை வங்கிகளின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்களின் ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது. இந்தக் குறை போக்கப்பட வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டி. சுப்பராவ் போன்ற பல நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதனையும் மத்திய அரசு விரைந்து பரிசீலித்திட வேண்டும்.

வங்கிகளின் மூலதனம் பேசல் ஐஐஐ விதிகளின்படி கணிசமாக உயர்த்தப்பட வேண்டி உள்ளது. 2018-ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொதுத் துறை வங்கிகளின் மூலதனத்தை உரிய அளவுக்கு உயர்த்திட 2.6 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படலாம் என்று சர்வதேச தர நிர்ணய அமைப்பான "ஸ்டேண்டர்டு அண்டு பூர்' (ள்ற்ஹய்க்ஹழ்க் ஹய்க் ல்ர்ர்ழ்) தெரிவித்துள்ளது.

இவ்வளவு பெரிய தொகையை அரசு மட்டுமே வழங்குவதென்பது சாத்தியமல்ல. எனவே, வங்கிகள் தங்களுடைய பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் அரசின் பங்கு 52 சதவீதத்துக்குக் குறையாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற மாநாட்டில், வங்கித் தலைவர்கள் அரசின் பங்கை 51 சதவீதத்திற்கும் குறைவாக ஆக்கிக் கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. இது ஏற்கத்தக்கது அல்ல. அரசுடைமை வங்கிகளைத் தனியார் மயமாக்கிட வழிகோலும் பரிந்துரையாக இது இருக்கிறது.

வங்கிகளில் சீர்திருத்தம் செய்வது வேறு; அவற்றைத் தனியார்மயம் ஆக்குவது என்பது வேறு. அரசு ஏற்கெனவே தெரிவித்திருப்பதுபோல் 52 சதவீதத்துக்குக் குறையாமல் வங்கிகளில் அரசு பங்குகள் இருக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

மேற்கூறிய மாநாட்டில் பிரதமர் மேலும் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். "2022-ஆம் ஆண்டுக்குள் 11 கோடி வீடுகள் அமைக்கப்பட உள்ளன. இந்த மாபெரும் திட்டத்தை வங்கிகள் ஒரு நல்ல வணிக வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்பதே அந்தக் கருத்து.

இந்தச் சூழ்நிலையில் அரசின் பங்குகள் 52 சதவீதத்துக்குக் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

வங்கிகளில், அரசின் மூலதனத்தைக் கையாளுவதற்கு "வங்கி மூலதன நிறுவனம்' என்ற ஓர் அமைப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிகிறது.

வங்கித் துறையை வலுப்படுத்தும் நோக்கில், மேற்கூறிய விஷயங்களில் அரசின் முடிவு என்ன என்பது அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த முடிவுகள் வங்கிகளை மேலும் வலுப்படுத்துவதாக அமைய வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளும் எதிர்பார்ப்பும் ஆகும்.

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.