நம் நாட்டுப் பாரம்பரியத்தின் மீதும் கலாசாரத்தின் மீதும் வெளிநாட்டவர்களுக்கு எப்போதும் ஒரு வன்மம் இருந்துக்கொண்டே இருக்கிறது. 1990 - களுக்குப் பிறகு, அதாவது உலகமயமாக்கலுக்குப் பின் வணித்தின் ஊடாக இந்தியக் கலாசாரத்தின் மீது அவை மறைமுக போர் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.
கலாசார அழிப்பினால் நம் நாட்டின் பல மாநிலங்களில் பாரம்பரிய அடையாளங்களை இழந்துள்ளன. அண்மைக்காலமாக, இந்தியாவில் பால் வியாபாரத்தைப் பெருக்க, நாட்டு மாடு இனத்தை அழிக்கும் முயற்சியில், பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து, விலங்குகள் நல அமைப்புகள் என்று கூறிக்கொள்ளும் சில நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
வட மாநிலங்களில் சில நாட்டு மாடு இனங்கள் அழிக்கப்பட்டு, அங்கு வெளிநாட்டு இன பசுக்களின் பால்தான் பயன்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது தமிழ்நாட்டில் நாட்டு மாடு இனங்களை அழிப்பதற்காக ஜல்லிக்கட்டு போட்டி முடக்கப்பட்டுள்ளது.
சற்று சிந்தித்தால் ஜல்லிக்கட்டில் ஒரு நுண் அரசியல் இருப்பது புரியும். உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. ஆனால், இங்குதான் "காளைகள் துன்புறுத்தப்படுகின்றன' என்று கூறி ஜல்லிக்கட்டு முடக்கப்படுகிறது. என்ன ஒரு நகைமுரண்?
டிராக்டர் மூலமே விவசாயம் என்று ஆகிவிட்ட இந்த நாளில் காளை மாடுகளை விவசாயத்துக்குப் பயன்படுத்ததுவது இல்லாமல் ஆகிவிட்டது.
இந்த நிலையில், இன விருத்திக்காக மட்டுமே ஜல்லிக்கட்டுக் காளைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை அழிக்கப்பட்டால், இன விருத்திக்கான காளைகளுக்கு நாம் ஐரோப்பிய நாடுகளை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும். அப்போது இங்கு பன்னாட்டு நிறுவனங்களின் வியாபாரம் தொடங்கும்.
வெளிநாடுகளில் நம் நாட்டு மாட்டின் இறைச்சிக்கு பெரும் வரவேற்பு உள்ளது. அவை நோய் தடுப்பு ஊசிகளோ மாத்திரைகளோ இல்லாமல் இயற்கையான முறையில் வளர்க்கப்படுகின்றன.
இறைச்சிக்காக நாட்டு காளைகள் அழிக்கப்பட்டுவிட்டால், பின்பு வெளிநாட்டு இனங்களை இந்தியாவுக்கு எளிதாக இறக்குமதி செய்ய முடியும்.
தமிழக நாட்டு மாடுகளில் ஆறு இனங்கள் உண்டு. அவற்றுள் காங்கயம், புளியக்குளம், மலமாடு, ஒம்பலச்சேரி ஆகிய நான்கு இனங்கள் முக்கியமானவை.
நாட்டு மாடு இனங்களை அழித்துவிட்டால் ஐரோப்பிய மாட்டு இனங்களான ஜெர்ஸி, சுவிஸ்ப்ரோ, ஹோல்ஸ்டின் போன்ற மாடுகளை இந்தியாவுக்கு கொண்டு வந்துவிடலாம்.
அது மட்டுமல்ல, ஐரோப்பிய மாடுகளை நம்மால் தடுப்பூசி போடாமல் வளர்க்க முடியாது, பின்பு அதனை உருவாக்கும் நிறுவனங்கள் இங்கு வரும் வியாபாரம் பெருகும்.
விவசாயிகளால் காளையைப் பராமரிக்க முடியாது என்பதைலேயே கிராமங்களில் கோயில் காளைகளை பலரும் சேர்ந்து பராமரிப்பார்கள், அந்தக் கோயில் காளைகளைத்தான் இனப்பெருக்கத்துக்கு உபயோகிப்பார்கள்.
அந்தக் காளைகள், பால் வியாபாரம் செய்யும் சிறு விவசாயிகளின் பசுக்களுடன் இனப் பெருக்கத்துக்காக விடப்படும். இவ்வாறு இயற்கையான முறையில் இனப் பெருக்கமும், பால் சுரப்பும் நிகழ்ந்து வந்தது.
காளைகளை வைத்து சிறிய அளவில் இனப் பெருக்கம் செய்வதற்கான இடங்களும் இருந்தன. ஆனால், இப்போது அந்த நிலை முற்றிலும் வழக்கொழிந்துவிட்டது. ஏறக்குறைய அனைத்து பால் பண்ணைகளிலும் செயற்கையான முறையில் இனப் பெருக்கமும், மருந்துகள் செலுத்தி பால் சுரப்பை அதிகரிக்கும் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடைவிதிக்கப்படுவதால், காளை மாடுகள் இறைச்சிக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், இயற்கையாக கருத்தரிக்கும் முறை குறைந்து, பசுக்களுக்கு ஊசி மூலம் விந்தணுக்கள் செலுத்தப்படுகின்றன. இதனால், மாவட்ட கால்நடை மருத்துவமனையில் சேகரிக்கப்பட்ட நாட்டு மாடுகளின் விந்தணுக்கள் குறைந்து வருகின்றன.
எனவே, பால் கறவையை அதிகரிக்க இப்போது வெளிநாடுகளில் இருந்து ஜெர்ஸி காளைகளின் விந்தணுக்கள் வாங்கப்படுகின்றன. அந்த விந்தணுக்கள் வாங்கப்பட்டு, கலப்பின முறையில் செயற்கையாகக் கருத்தரிக்கும் முறை கையாளப்பட்டு வருகிறது.
இதன் மூலம் புதிய இனம் உருவாகிறது, மேலும், பண்ணைகளுக்கு அதிகப்படியான பாலையும் பசுக்கள் அளிக்கின்றன.
ஏ1, ஏ2 என இண்டு வகையாக பால் பிரிக்கப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து பாலூட்டிகளும் இயற்கையாக ஏ2 வகையான பாலையே சுரக்கின்றன. மனித இனத்தின் தாய்ப்பாலும் இந்த ஏ2 வகையைச் சேர்ந்ததே. இயற்கையாக உருவாகும் இவ்வகையான பால்தான் எளிதில் சீரணமாகும். அதனால்தான், இதே வகையான பசுவின் பாலை நாம் பயன்படுத்த ஆரம்பித்தோம்.
ஆனால், பால் வியாபாரம் உலகமயமான பிறகு, ஐரோப்பாவில் அதிகமாக பால் கறக்கும் மாடுகளை மட்டுமே தேர்வு செய்து, அவற்றை மட்டுமே இனப் பெருக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
சுவையற்ற இப்பால் உடலுக்குத் தீங்கு செய்யக்கூடியது. சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு இந்த ஏ1 வகை பாலும் ஒரு முக்கியக் காரணமாகும். குழந்தைகளுக்கு இந்த வகையான பாலை செரிக்கும் ஆற்றல் இல்லை.
இந்தப் பின்புலம் குறித்து அறியாமல் சிலர் "ஜல்லிக்கட்டை வீடியோ கேம்ஸில் விளையாடலாமே' என ஏளனம் செய்கின்றனர். இந்த திட்டமிட்ட நாட்டு மாடு இன அழிப்பை தமிழர்கள் உடனே தடுக்காவிடில் இதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
வெறுமனே "காளைகளை ஏன் துன்புறுத்துகிறார்கள்?' என்ற கேள்வியுடன் முடிந்து போகிற விஷயமல்ல இது என்பதை காலம் உணர்த்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஏப். 9 வரை மழைக்கு வாய்ப்பு

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைத்தான் திமுக முடித்துள்ளது! காட்பாடி அதிமுக வேட்பாளா்

4.4.1976: காமராஜுக்கு 'பாரத ரத்னா' விருது: அவரது சகோதரி ராஷ்டிரபதியிடம் பெற்றார்
வங்கி மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை: ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

