எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரிசர்வ் வங்கியின் கண்காணிப்புப் பணி

அண்மைக்கால வங்கி மோசடிகளையடுத்து, மத்திய அரசு மேற்கொண்டு வரும் நிடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, எதிர்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் மீண்டும் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்வது

News image
Updated On :3 ஏப்ரல் 2018, 7:47 pm

எஸ். கோபாலகிருஷ்ணன்

அண்மைக்கால வங்கி மோசடிகளையடுத்து, மத்திய அரசு மேற்கொண்டு வரும் நிடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, எதிர்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் மீண்டும் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்வது எப்படி என்று சிந்திப்பதே தற்போதைய முக்கிய கடமை. பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி நாட்டை பெரிதும் உலுக்கிவிட்டதற்கு காரணம் மோசடித் தொகை முன் எப்போதும் இல்லாத அளவு பெரிது என்பதாகவும் இருக்கலாம்.
வங்கி மோசடிகள் எப்போதோ ஒருமுறை நிகழ்வதாக சொல்ல முடியாது. மாறாக, அது தொடர்ந்து நிகழ்கிறது. இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் வங்கி மோசடிகளின் ஒட்டுமொத்த தொகை கிட்டத்தட்ட மூலின்று மடங்கு அதிகரித்துள்ளது. 2013-ஆம் ஆண்டு ரூ.8,649 கோடியாக இருந்தது, 2017-இல் ரூ.23,935 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் மகாராஷ்டிரம், கர்நாடகம், தில்லி, சண்டீகர் மற்றும் மேற்கு வங்கம் முன்னிலை வகிக்கின்றன.
வங்கி மோசடிகளை உன்னிப்பாக கவனித்தால் இரண்டு விஷயங்கள் புலப்படும். ஒன்று, வங்கி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் விதிமுறைகளை மீறி வெளியாருடன் சேர்ந்து பணமோசடியில் ஈடுபட்டு வங்கிக்கு இழப்பை ஏற்படுத்துவது. இரண்டாவது வகை, வங்கியின் தலைமை நிர்வாகமே, குறிப்பிட்ட நபருக்கு உதவும்பொருட்டு முறைகேடாக கடன் வழங்குவது. இதுவும் வங்கிக்கு இழப்பு ஏற்படுவதுதான். இரண்டாவது வகையில், வாடிக்கையாளரின் சமூலிக அந்தஸ்து காரணமாக, வங்கியின் உயர் நிர்வாகம் மற்றும் அரசியல் புள்ளிகளின் கூட்டுச் சதி மறைந்திருக்கும் என்பது வெளிப்படை. இவ்விரு வகை மோசடியின் விளைவாகவும் வங்கிக்கு இழப்பு ஏற்படும்; அது மத்திய அரசின் இழப்பாக மாறும். இறுதியில் பட்ஜெட் வாயிலாக, வரி வடிவில் மக்கள் தலையில் விழும் என்பதே உண்மை.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. வங்கி மோசடிகள் நிகழாமல் தடுக்கும் பொறுப்பு யாருடையது? சம்பந்தப்பட்ட வங்கி, ரிசர்வ் வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் உரிமையாளர் என்ற வகையில் மத்திய அரசு ஆகிய அனைலிவருக்குமே பொறுப்பு உண்டு. அதே ÷நேரம் கண்காணிப்பு என்று வரும்போது, ரிசர்வ் வங்கிதான் வங்கிகளை கண்காணிக்க வேண்டும் என்றே எல்லோரும் நினைக்கிறார்கள். இது நியாயமும் கூட.
ஆனால், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், சென்ற கடந்த மார்ச் மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது சொன்னது என்ன? 'வங்கிகளில் நடக்கும் எல்லா மோசடிகளையும் தடுப்பதோ கண்காணிப்பதோ ரிசர்வ் வங்கிக்கு சாத்தியம் இல்லை. அதிலும் குறிப்பாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நடக்கும் மோசடிகளை கண்காணிப்பது சாத்தியமே இல்லை. தனியார் வங்கிகளில் மட்டுமே அது பெரும் அளவு சாத்தியமாக இருக்கக்கூடும்' என்றார் ரிசர்வ் வங்கி ஆளுநர். அவரது கருத்து ச ர்ச்சைக்குரியதாக மாறியதில் வியப்பில்லை.
அவர் சொல்லாமல் சொல்வது என்னவென்றால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் உரிமையாளர்கள் மத்திய அரசு என்பதாலும், அரசிடம் கூடுதல் அதிகாரங்கள் இருப்பதாலும், புதிய சூழலுக்கு ஏற்ப, தேவையான விதிமுறைகளை உருவாக்கும் நிலையில் மத்திய அரசுதான் உள்ளது; ரிசர்வ் வங்கிக்கு அந்த வாய்ப்பில்லை என்பதே.
இந்த முக்கியப் பிரச்னையில் வங்கி வரையறை சட்டம் 1949 என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்கும் கொள்கையை கட்டுப்படுத்துதல், துறை சார்ந்த கடன்களுக்கு உச்சவரம்பு நிர்ணயித்தல், எந்தப் பயன்பாட்டிற்கெல்லாம் கடன் வழங்கலாம் என்பதை நிர்ணயித்தல் (பிரிவு 21) ஆகிய அதிகாரங்கள் ரிசர்வ் வங்கிக்கு தரப்பட்டுள்ளது.
விவசாயத்துக்கும், சிறுதொழில்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் 40% கடன் வழங்குவது இந்த அதிகாரத்தின் அடிப்படையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிவு 30படி, தணிக்கையாளர்களை நியமிப்பதற்கு ஒப்புதல் வழங்கவும், சிறப்புத் தணிக்கைக்கு ஏற்பாடு செய்வதற்கும் ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பிரிவு 31படி, பொதுத்துறை வங்கிகள் என்னென்ன தகவல்கள் அடங்கிய அறிக்கைகளை (ரிடர்ன்ஸ்) ரிசர்வ் வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கலாம்.
தனியார் வங்கிகளை ஆய்வு செய்வதுபோல் பொதுத்துறை வங்கிகளையும் ஆய்வு செய்வதுடன், தேவையான நெறிமுறைகளையும் விதிமுறைகளையும் நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் ரிசர்வ் வங்கி வழங்கலாம் என்கிறது பிரிவு 35-ஏ.
முக்கியமாக, பொதுத்துறை வங்கி இயக்குநர் குழுவில், ரிசர்வ வங்கி தனது அதிகாரி ஒருவரை இயக்குநராக நியமிக்கலாம். அவர் இயக்குநர் குழு விவாதங்களில் பங்கு கொள்ளலாம்; ஆவணங்களைக் கோரலாம்; நிர்வாகத்தில் (இயக்குநர் குழு நீங்கலாக) மாற்றம் செய்வதற்கு வங்கியைப் பணிக்கலாம் (பிரிவு-36).
ரிசர்வ் வங்கி விதிகளின்படி, தேவையான ஆவணங்களை முறைப்படி வைத்திருப்பதற்கு பொதுத்துறை வங்கிகளுக்கு உத்தரவிடலாம் (பிரிவு 45-ஒய்). தேவையானபோது பொதுத்துறை வங்கிகளுக்கு நீதிமன்றம் மூலிலமோ, ÷நேரடியாகவோ அபராதம் விதிக்கலாம் (பிரிவு 47-ஏ).
இதுபோல், வங்கி வரைமுறை சட்டம்-1949-இல் மொத்தம் 13 பிரிவுகளின் லிமூலம் ரிசர்வ் வங்கிக்கு பொதுத்துறை வங்கிகளின் மீது உள்ள அதிகாரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
தனியார் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கிக்கு விரிந்து, பரந்த அதிகாரங்கள் இருப்பதுபோல் பொதுத்துறை வங்கிகள் மீது இல்லை என்பது தெளிவு. இதனை ஓரளவு சமன் செய்யும் வகையில்தான், ரிசர்வ் வங்கி தனது மூலித்த அதிகாரி ஒருவரை பொதுத்துறை வங்கிகளில் இயக்குநராக நியமிக்கலாம் என்கிற உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி மேற்பார்வை இடுவதற்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் தலைவர் மற்றும் இயக்குநர்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது. ரிசர்வ் வங்கியின் அதிகாரங்களைவிட மத்திய அரசின் அதிகாரங்கள் கூடுதல் என்பது உண்மை. ஆனால் அதன் காரணமாகவே, பொதுத்துறை வங்கிகளில் மோசடிகள் நிகழாமல் தடுப்பதோ, கண்காணிப்பதோ ரிசர்வ் வங்கிக்கு சாத்தியமில்லை என்று கூறுவது, இந்திய ரிசர்வ் வங்கி போன்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற அமைப்புக்கு அழகல்ல.
தனது பணியை மேலும் சிறப்பாகச் செய்திட இன்னின்ன கூடுதல் அதிகாரங்கள், கூடுதல் மனிதவளம், புதிய தொழில்நுட்ப வசதிகள், கட்டமைப்பு வசதிகள் வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்கலாம். பொதுத்துறை வங்கிகளில் அனுபவம் வாய்ந்த பொது மேலாளர் நிலையில் உள்ள அதிகாரிகளை இடைக்கால பணியிட மாற்ற அடிப்படையில் 3 ஆண்டு காலத்துக்கு ரிசர்வ் வங்கியில் பணியாற்ற ஏற்பாடு செய்யலாம். மத்திய கண்காணிப்பு ஆணையம் இந்த நடைமுறையைப் பின்பற்றுகிறது.
தற்போது உள்ள நான்கு துணை ஆளுநர்களின் எண்ணிக்கையை ஐந்தாக அதிகரிக்கலாம். அதில் ஒருவர் மட்டும் வங்கித்துறையிலிருந்து தேர்வு செய்யப்படுகிறார். மாறாக, இரண்டு துணை கவர்னர் பதவிக்கு லிமூத்த அதிகாரிகளை பொதுத்துறை வங்கியிலிருந்து தேர்வு செய்யலாம். இதுபோல் பல வழிகளில் மனிதவளத்தை மேம்படுத்துவது சாத்தியமே.
2008-இல் அமெரிக்காவில் லீமேன் பிரதர்ஸ் என்னும் புகழ்மிக்க இன்வெஸ்ட்மெண்ட் வங்கி திவால் ஆனது. அதுசமயம் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. அதனை தொடர்ந்து உலக அளவில் பல நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. இந்தியா எந்த பாதிப்பும் இன்றி தாக்குப்பிடித்ததற்கு காரணம் பாரத ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளே என்று அமெரிக்க பத்திரிக்கைகள் புகழாரம் சூட்டியதை யாரும் மறந்திருக்க முடியாது.
வங்கிகளை கண்காணிக்க மிகவும் பொருத்தமான அமைப்பு ரிசர்வ் வங்கியே என்பதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுக்கவேண்டும்.
வங்கித் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் ஓய்வுபெறுகையில், அவர்களது இடத்தில் புதிய நிபர்களைத் தேர்வு செய்து நியமிப்பதில் ஏற்படும் அதீத கால தாமதம் தவிர்க்கப்பட வேண்டும். சில நேரங்களில் குறுகிய காலத்திலேயே வங்கித் தலைவர்கள் மற்றும் செயல் இயக்குநர்கள் மாற்றப்படுவதும் இயன்ற அளவு தவிர்க்கப்பட வேண்டும். வங்கி இயக்குநர் குழுவில் இயன்றவரை துறைசார்ந்த நிபுணர்களை மட்டுமே இயக்குநர்களாக நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தத் தேவை இல்லை.
வங்கி நிறுவனங்கள் (Acquisition and Transfer of Undertakings) சட்டம் 1970 மற்றும் 1980படி 'எம்பிளாயி' இயக்குநர், அதிகாரி இயக்குநர் ஆகியோர் பொதுத்துறை வங்கிகளின் இயக்குநர் குழுவில் இயக்குநராக நயமிக்க வேண்டும். அதன்படி தொடக்கம் முதல் முறையாக அவர்கள் நியமிக்கப்பட்டு வந்தார்கள். இந்த இயக்குநர்களுக்கு வங்கியின் செயல்பாடுகள் அத்துப்படி என்பதால் அவர்கள் சிறந்த பங்களிப்பை வழங்கிவந்தார்கள். மேலும், வங்கியில் முறைகேடு நடந்தால் அதனைக் கண்டறிந்து வங்கி நிர்வாகத்துக்குத் தெரிவிப்பார்கள். ஒருவகையில் கண்காணிப்பாளர்களாகச் செயல்பட்டார்கள். துரதிருஷ்டவசமாக 2014 முதல் இந்த வகை இயக்குநர்கள் ஒருவர்கூட நியமிக்கப்படவில்லை. 20 பொதுத்துறை வங்கிகளில் அவர்கள் இடம் காலியாகவுள்ளது.
ரிசர்வ் வங்கிக்கு ஒரு வார்த்தை. பஞ்சாப் நேஷனல் வங்கி விவகாரத்தில் SWIFT மற்றும் சி.பி.எஸ். (Core Banking Solutions) இணைக்கப்படவில்லை என்பது உண்மை. ஆனால், இந்திய பட்டயக் கணக்காளர்கள் அமைப்பின் வழிகாட்டுதல் அறிக்கையில் சொல்லியிருப்பதுபோல் SWIFT ஆவணங்களையும் வங்கியின் பிரதான கணக்குகளையும் தனித்தனியாக ஆய்வு செய்து ஒப்பிட்டுப் பார்த்திருந்தால் பெரிய தொகை வேறுபாடு இருந்ததை தணிக்கையாளர்கள் கண்டுபிடித்திருக்கலாம். வங்கியின் தணிக்கையாளர், தொடர் (கன்கரண்ட்) தணிக்கையாளர், ரிசர்வ் வங்கியில் ஒப்புதல் வழங்கப்பட்ட தணிக்கையாளர் என எவருமே 6 ஆண்டுகளில் முறையாகத் தணிக்கை செய்யாமல் போனது எப்படி என்பது ஆய்வுக்குரிய விஷயம் அல்லவா?
எது எப்படி இருந்தாலும், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் அண்மையில் பேசியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ''ரிசர்வ் வங்கி விஷத்தை விழுங்கிவிட்டு, தொண்டையில் அடைத்துக்கொண்டு, ''நீலகண்டனாக'' தன் பணியைச் செய்து வரும்'' என்ற வார்த்தைகளே அவை.
மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கைகோத்து, இணைந்து செயல்பட்டு, வங்கித்துறையை பீடித்துள்ள பிணியை போக்கிட வேண்டும். இந்தப் புனித வேள்வியில் பொதுத்துறை வங்கி அலுவலர்கள் மற்றும் நிர்வாகம் உறுதுணையாக இருத்தல் வேண்டும். இந்த முத்தரப்பு கூட்டு நிச்சயம் வெல்லும்; வெல்ல வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.