'வாக்காளரியல்' என்பது வாக்குகள், வாக்காளர்கள் மற்றும் தேர்தல்களை முறையான, அறிவியல் மற்றும் பல்துறை அணுகுமுறையில் ஆய்வு செய்யும் ஒரு தனித்துவமான கல்வித் துறையாகும்.
'வாக்காளரிலிசம்' என்பது வாக்காளரியலின் கோட்பாடுகள், கொள்கைகள் மற்றும் சிந்தனைகளை சமூகத்தில் பரப்பி, வாக்காளர் விழிப்புணர்வையும் ஜனநாயகப் பொறுப்புணர்வையும் வளர்க்கும் இயக்கமாகும்.
"வாக்காளரியல்' என்ற சொல் தமிழ் மொழியில் முதன்முதலாக 1996-ஆம் ஆண்டு வெளியான நூல் ஒன்றில் இடம்பெற்றது. அதன் பிறகு, வாக்காளரியல் குறித்த சிந்தனைகள் தொடர்ந்து விரிவடைந்து, இன்று தனித்த கல்வித் துறையாக உருவெடுக்கும் நிலையை எட்டியுள்ளன. வாக்காளரியலை ஏன் தனித்த கல்வித் துறையாக அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை விளக்கும் பத்து காரணங்கள், அதன் பத்து அடிப்படைக் கொள்கைகள், பத்து கோட்பாடுகள், பத்து கோட்பாட்டு நெறிகள் மற்றும் பத்து கருத்தாக்கங்களுடன் வாக்காளரியல் இன்று ஓர் ஒழுங்கமைந்த கல்வித் துறையாக உருவெடுத்துள்ளது.
வாக்காளரியலின் அடித்தளங்கள், உலகளாவிய தேர்தல் ஆளுகை, தேர்தல் நிர்வாகம் மற்றும் மேலாண்மை, தேர்தல் வரலாறும் ஒப்பீட்டு தேர்தல் முறைகளும், தேர்தல் சட்டமும் தேர்தல் நீதியும், வாக்காளர் கல்வி, அதிகாரமளித்தல் மற்றும் அறிவு மேம்பாடு, அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் மற்றும் தேர்தல் உத்திகள், வாக்காளர் உளவியலும் தேர்தல் சமூகவியலும், வாக்காளரை மையமாகக் கொண்ட பத்திரிகையியல் மற்றும் தேர்தல் தகவல் தொடர்பியல், வாக்காளரியலில் ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் அமைதி ஆகியன வாக்காளரியலின் பத்து கல்வி கருப்பொருள்கள்.
வாக்காளரியலின் வரையறை, நோக்கம், பரப்பு, அடிப்படைக் கொள்கைகள், கோட்பாடுகள், கோட்பாட்டு நெறிகள், கருத்தாக்கங்கள் மற்றும் ஆய்வு முறைகள் ஆகியவற்றை வாக்காளரியலின் அடித்தளங்கள் விளக்குகிறது. சுதந்திரமான, நேர்மையான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான சர்வதேச சட்டங்கள், சர்வதேச தேர்தல் தரநிலைகள், உலகளாவிய சிறந்த நடைமுறைகள் குறித்து உலகளாவிய தேர்தல் ஆளுகைப் பிரிவு ஆய்வு செய்கிறது.
வாக்காளர் பட்டியல் தயாரித்தல், தேர்தல் திட்டமிடல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, தேர்தல் தொழில்நுட்பம், தேர்தல் பாதுகாப்பு மற்றும் தேர்தல் மேலாண்மை தொடர்பான நடைமுறைகளை தேர்தல் நிர்வாகம் மற்றும் மேலாண்மை பிரிவு கற்பிக்கிறது.
உலக நாடுகளில் தேர்தல் முறைகள் எவ்வாறு வளர்ச்சி பெற்றன, பெரும்பான்மை முறை, விகிதாசார பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் முறைகளின் சிறப்புகள், குறைபாடுகள் மற்றும் ஒப்பீடுகள் குறித்து தேர்தல் வரலாறும் ஒப்பீட்டு தேர்தல் முறைகளும் பிரிவு ஆராய்கிறது. அரசமைப்புச் சட்டம், தேர்தல் சட்டங்கள், வாக்குரிமை, தேர்தல் குற்றங்கள், தேர்தல் மனுக்கள், தேர்தல் நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் நீதிக்கான சட்டக் கட்டமைப்புகளை தேர்தல் சட்டமும் தேர்தல் நீதியும் பிரிவு விளக்குகிறது. வாக்காளர் விழிப்புணர்வு, தேர்தல் கல்வி, ஜனநாயகப் பொறுப்புணர்வு, தகவலறிந்த வாக்களித்தல் மற்றும் பொறுப்பான குடிமக்களை உருவாக்கும் கல்வி முறைகள் குறித்து வாக்காளர் கல்வி, அதிகாரமளித்தல் மற்றும் அறிவு மேம்பாடு பிரிவு கவனம் செலுத்துகிறது.
அரசியல் கட்சிகளின் பங்கு, தேர்தல் பிரசாரங்கள், மக்கள் இயக்கங்கள், அரசியல் தகவல் பரிமாற்றம், தேர்தல் உத்திகள் மற்றும் பொறுப்பான வாக்கு அரசியலை அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் மற்றும் தேர்தல் உத்திகள் பிரிவு மதிப்பீடு செய்கிறது. வாக்காளர்களின் மனநிலை, வாக்கு முடிவெடுக்கும் செயல்முறை, சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உளவியல் காரணிகள் வாக்குப்பதிவில் ஏற்படுத்தும் தாக்கத்தை வாக்காளர் உளவியலும் தேர்தல் சமூகவியலும் பிரிவு விளக்குகிறது.
தேர்தல் செய்தியிடல், உண்மை சரிபார்ப்பு உள்ளிட்டவற்றை வாக்காளரை மையமாகக் கொண்ட பத்திரிகையியல் மற்றும் தேர்தல் தகவல் தொடர்பியல் பிரிவு கற்பிக்கிறது.
தரமான தேர்தல்கள் எவ்வாறு ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றன, நல்லாட்சியை உருவாக்குகின்றன உள்ளிட்டவற்றை வாக்காளரியலில் ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் அமைதிப் பிரிவு ஆய்வு செய்கிறது.
இன்று பல்கலைக்கழகங்களில் அரசியல் அறிவியல், பொதுநிர்வாகம், தேர்தல் மேலாண்மை, பொதுக் கொள்கை போன்ற துறைகள் தனித்தனியாக கற்பிக்கப்படுகின்றன. ஆனால் வாக்காளர், வாக்கு, தேர்தல், தேர்தல் ஆளுகை, தேர்தல் நீதி மற்றும் ஜனநாயகத்தின் தரம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆய்வு செய்யும் கல்வித் துறை இதுவரை உருவாக்கப்படவில்லை. அந்த இடைவெளியை நிரப்பும் புதிய கல்வித் துறையாக வாக்காளரியல் அமைகிறது. வாக்காளரியலை தனித்த கல்வித் துறையாக நிறுவ வேண்டிய காலம் இதுவாகும். வாக்காளரியலின் பத்து கருப்பொருள்களை உள்ளடக்கிய எம்.ஏ. (வாக்காளரியல்) பட்டப்படிப்பை பல்கலைக் கழகங்களில் தொடங்க வேண்டும்.
இளநிலைப் பட்டப்படிப்புகளில் வாக்காளரியலின் அடிப்படைக் கோட்பாடுகளை ஒரு தேர்வுப் பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், பள்ளிக் கல்வியில் வாக்காளரியல் அறிமுக பாடம் ஒன்று இடம்பெற வேண்டும்.
வாக்காளரியலில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு தேர்தல் நிர்வாகம், வாக்காளர் கல்வி, தேர்தல் ஆய்வு, பொதுக் கொள்கை, நல்லாட்சி, அரசியல் தகவல் தொடர்பு, தேர்தல் தரவு பகுப்பாய்வு, ஊடக ஆய்வு, அரசு மற்றும் சர்வதேச நிறுவனங்கள், சமூக அமைப்புகள், கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
மேலும், 'வாக்காளரியலாளர்' என்ற புதிய தொழில்முறை அடையாளத்தையும் இந்தக் கல்வித் துறை உருவாக்கும். மேலும், 'வாக்காளரியலாளர்' என்ற புதிய தொழில்முறை அடையாளத்தையும் இந்தக் கல்வித் துறை உருவாக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒடிசாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் குளறுபடிகள்: பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு

என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தில் எஸ்ஐஆர் பற்றி பாடம் சேர்ப்பு!

பள்ளிக் கல்வித் துறை நீதிமன்ற வழக்குகள்: கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

அரசுப் பள்ளிகளில் மாவட்டக் கல்வி அலுவலா் ஆய்வு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


