தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

ஊழலல்ல, புத்தி கொள்முதல்!

புத்தகக் கொள்முதல் முறைகேடு பற்றிய நடுப்பக்கக் கட்டுரை....

Updated On :

நூலகத் துறை எப்போதும் தரமற்ற புத்தகங்களையே அதிகம் வாங்கி வந்துள்ளது. அரசு மற்றும் ஆளும்கட்சியை போற்றிப் பாடும் எழுத்தாளர்களின் புத்தகங்களை அதிகமாகவும், இடதுசாரி சிந்தனைகளை கணிசமாகவும், வலதுசாரி மற்றும் பக்தி நூல்களை மிகச் சிலவாகவும் வாங்குவது தமிழக நூலகத் துறையின் வழிமுறையாக இருந்து வருகிறது. ஆகவே, இப்போதைய புத்தகக் கொள்முதல் முறைகேடு எந்தவித வியப்பையும் தரவில்லை.

புத்தகங்களைக் கொள்முதல் செய்வதற்கும், அவற்றின் விலை நிர்ணயத்துக்கும் அரசு நூலகத் துறை வைத்துள்ள அளவுகோல்கள் நடைமுறைக்குச் சாத்தியமில்லாதவை; நகைப்புக்கு இடமானவை. அதையும் மீறி, சில புத்தகங்கள், விதிகளை மீறி வாங்கப்படுவது புதிதல்ல; அத்தகைய நூல்கள் பலவும் அரசுக்கு சாதகமான எழுத்தாளர்களின் நூல்களாக இருக்கும்.

இந்த நடைமுறையில் இப்போது ஏற்பட்டுள்ள ஒரு மாற்றத்தைக் காண்கிறோம். ஆளும் கட்சியைப் போற்றிப் பாடும் எழுத்தாளர்கள், தரமற்ற நூல்களுக்குப் பதிலாக, யார் யார் பெயரிலோ ஏ.ஐ. எழுதிய தரமற்ற நூல்களை போலியான பதிப்பகங்கள் வாயிலாக வாங்கியுள்ளது நூலகத் துறை; அவ்வளவுதான் வித்தியாசம்.

ஒரே பதிப்பகத்திடம் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் புத்தகம் வாங்க வேண்டும் என்று விதிகள் இருப்பதால், சில பதிப்பாளர்கள் பல பெயர்களில் பதிப்பகங்களைத் தொடங்கி தங்கள் நூல்களை நூலகத்துக்கு விற்கும் போக்கு நடைமுறையில் உள்ளது என்பதை புத்தக உலகம் அறியும். இந்நிலையில் அகல்விளக்கு என்ற ஒரு பதிப்பகம் மட்டுமே விதிவிலக்காக ஆயிரக்கணக்கான நூல்களுக்கு ஆணை பெற்றதுதான் இப்போது பேசுபொருளாக உள்ளது.

ஏ.ஐ. எழுதிய புத்தங்கள் தரமற்றவை என்பது மட்டுமே குற்றச்சாட்டு. இதில் ஊழல் நடந்ததை நிரூபிக்க வாய்ப்பில்லை. விதிகளை மீறி ஒரே நிறுவனத்திடம் வாங்கியதற்காக சில அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள். அதுவும்கூட, துறைவாரி நடவடிக்கை என்பதாகச் சொல்லி, பின்னர் எல்லாரும் மறந்த பிறகு அரசும் தண்டிக்க மறந்துவிடும்.

இன்றைய நூலகத் துறை, உண்மையாகவே அக்கறை கொள்ள, அதற்கான பணிகளைச் செய்ய நிறைய விஷயங்கள் உள்ளன. காலத்தின் தேவைக்கு ஏற்ப நூலகத்தை எவ்வாறு மாற்றுவது என்பதைப் பற்றி யோசித்தாக வேண்டும்.

இன்றைய பள்ளி, கல்லுôரி மாணவர்களோ அல்லது குடும்பத் தலைவிகளோ நூலகம் வந்து புத்தகம் வாங்கிச் செல்லும் வழக்கம் மிகக் குறைந்துவிட்டது. பல நூலகங்களில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. மீண்டும் வாசகர்களைப் பெறுவது எப்படி? கல்லுôரி மாணவர்களை நூலகத்துக்கு வரவழைப்பது சாத்தியமில்லை என்றாலும், நூலகம் அவர்களது கைப்பேசிக்குள் நுழைந்து, அவர்களை வாசிப்பு பழக்கத்துக்கு இட்டுவரச் செய்வது எப்படி? என்று யோசிக்க வேண்டும்.

நூலகங்களுக்கு வரும் வாசகர் எண்ணிக்கை பல மடங்கு சரிந்துவிட்டது. இன்று யார் நூலகத்துக்கு வருகிறார்கள்? அவர்கள் தேர்வு செய்யும் நூல்கள் என்ன? என்பதைப் பார்த்தால் வியப்புதான் மிஞ்சும். உதாரணமாக, எழும்பூர் கன்னிமாரா நூலகத்துக்கு சென்று பார்த்தால், அங்கே உள்ளும் வெளியும் நிரம்பிக் கிடக்கும் இளைஞர் கூட்டம்,

உயர்நிலைப் பள்ளி வகுப்புகளுக்கான அறிவியல் பாடங்களைப் படித்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். அவர்கள் தேர்வு செய்யும் புத்தகங்கள் யுபிஎஸ்சி தேர்வுக்கு உரித்தானவையாக இருக்கும். மற்றபடி புத்தகம் வாசிக்க வருவோரில் பாதிக்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றவர்களாக இருப்பார்கள்.

புத்தகத் தேர்வுக் குழு இனி வாசகர்களாக இருக்க வேண்டும். தேர்வுக் குழு அவசியமில்லை. நூலகத்தில் அங்கத்தினராக உள்ள அனைத்து வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் விரும்புகிற, அவர்கள் சில விமர்சனங்கள் மூலம் அறியவந்த நூல்களை வாங்க வேண்டும். வெளியாகும் நூல்களின் தலைப்பு, ஆசிரியர் பெயர், அதன் மையக் கருத்து தொடர்பான குறிப்புகளை நூலக உறுப்பினர்களுக்கு அனுப்பி, அவர்கள் இதை வாங்கலாம் என்று எத்தனை பேர் கருத்து தெரிவிக்கிறார்கள் என்பதைப் பொருத்து அந்த நூலின் தரத்தையும், வாங்கப்படும் எண்ணிக்கையையும் தீர்மானிக்கலாம்.

சென்னை உள்ளிட்ட புத்தகக் கண்காட்சியில் விற்பனையாகும் புத்தகங்கள், அதிக அளவு விரும்பப்பட்ட எழுத்தாளர்கள் குறித்து விவரம் சேகரிப்பது மிக மிக எளிது. இதையே ஓர் ஆதாரமாக வைத்து, அத்தகைய நூல்களை வாங்கி தமிழகம் முழுவதும் நூலகங்களுக்கு அனுப்பி, எளியோரும் படிக்கச் செய்யலாம்.

நூல்களை வாங்கிக் குவிப்பதால் இடப்பற்றாக்குறை, பராமரிக்க முடியாத நிலைமை ஏற்படுகிறது. புத்தகங்களின் இ-புத்தக உரிமை பெற்று இணையதளத்தில் எவரும் இருந்த இடத்தில் படிப்பதற்கான இணையதளமாகவும் அரசு நூலகம் மாற வேண்டும்.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குப் படிப்போர் எண்ணிக்கைதான் நூலகத்துக்கு வருவோரில் பெரும் பகுதியாக இருப்பதால், நூலகத் துறை யூ-டியூப் சேனலைத் தொடங்கி, அதன் வழியே போட்டித் தேர்வுகளுக்கான பாடங்களை நடத்துவதன் மூலமாக, மாணவர்களை துணை நூல்களைத் தேடி நூலகம் வரும்படி செய்யலாம்.

தமிழகத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நடைபெற சுமார் 50 நாள்கள் இருக்கும் நிலையில், நூலகக் கொள்முதல் முறைகேடுகள் காரணமாக அனைத்து கொள்முதல் ஆணைகளும் ரத்து செய்யப்பட்டிருப்பது வருத்தம் தருகிறது. தகுதியுள்ள நூல்களை வாங்குவதற்கு மீண்டும் ஒரு தனி அரசாணையை வெளியிட வேண்டும்.

இந்த விவகாரத்தில் புத்தக விற்பனையாளர்கள் மெüனமாக இருக்கிறார்கள். ஒருவேளை, சென்னை புத்தகக் கண்காட்சியை மனதில் வைத்து அமைதி காக்கிறார்கள் எனக் கருதலாம். நூலகத்துறையின் புத்தகத் தேர்வு, கொள்முதல் உள்ளிட்டவற்றில் புத்தகப் பதிப்பாளர்கள் துணிந்து முனைப்புக் காட்ட வேண்டும். தங்களது குரலுக்கும் கருத்துக்கும் ஆட்சியாளர்கள் செவிசாய்க்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் மட்டுமல்ல, எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும் ஊடகங்களும்கூட நூலகத் துறையை வழிநடத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.