ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

உள்ளாட்சி ஜனநாயகம்!

கிராம சபை உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவம் பற்றி....

கிராம சபை - கோப்புப்படம்.

Published On :

மா. சந்திரசேகரன்

ஒவ்வொரு கிராமமும் முழு அதிகாரங்களைக் கொண்ட ஒரு குடியரசாக அல்லது பஞ்சாயத்தாக மாறும்... இந்தியாவின் உண்மையான ஜனநாயகத்தில் கிராமமே அதன் அடிப்படை அலகாகும்.

- மகாத்மா காந்தி

மனிதன் வேட்டையாடி உணவு தேடித் திரிந்த காலத்திலேயே, குழு அமைப்பு, கூட்டு முடிவு எடுக்கும் முறை ஆகிய நடைமுறைகள் இருந்ததாகக் கருதப்படுகிறது. நவீன அரசமைப்பு தோன்றும் வரை, கிராம அளவிலான உள்ளூர் மக்களைக் கொண்ட குழுக்கள், அவர்கள் வாழ்க்கை முறையில் பெரும் பங்காற்றின. மெüரிய பேரரசு காலத்தில் கிராமங்கள் சுயாட்சி பெற்ற அலகுகளாகத் திகழ்ந்தன. கெüடில்யரின் அர்த்தசாஸ்திரம் நிர்வாகப் பரவலாக்கம் குறித்துப் பேசுகிறது. சோழர்கள் ஆட்சி, பழங்கால உள்ளாட்சி நிர்வாகத்தின் உச்சமாகக் கருதப்படுகிறது. குடவோலை முறை மூலம் கிராம நிர்வாக வாரியங்களைத் தேர்வு செய்யும் நடைமுறை குறித்து உத்தரமேரூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை ரிப்பன் பிரபு (1882) கொண்டு வந்தார்; இந்தியாவில் "நவீன உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை' என இவர் போற்றப்படுகிறார்.

சுதந்திர இந்தியாவின், இந்திய அரசமைப்புச் சட்டம், வழிகாட்டு நெறிமுறைகள், பிரிவு 40 கிராம ஊராட்சிகளை தோற்றுவிக்க மாநில அரசுகளை அறிவுறுத்தியது. 1957-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பல்வந்த் ராய் மேத்தா குழு மூன்றடக்கு ஊரக உள்ளாட்சி முறையைப் பரிந்துரைத்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் 1959-ஆம் ஆண்டு இது முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அமைக்கப்பட்ட அசோக் மேத்தா குழு (1977) உள்ளிட்ட பிற குழுக்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியல் சட்ட அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தின.

1992-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 73-ஆவது மற்றும் 74-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகார பாதுகாப்பையும், சட்ட அந்தஸ்தையும் வழங்கின. ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தில், கிராம ஊராட்சி, வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி என்ற மூன்றடுக்கு முறை உருவானது. இந்திய அரசமைப்புச் சட்டம் 73-ஆம் திருத்தம், பிரிவு 243ஏ-இன் படி அந்தந்த மாநில அரசுகள், விரிவான சட்டங்களையும், விதிமுறைகளையும் உருவாக்க வழிவகை செய்யப்பட்டது. தமிழ்நாட்டில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் அதன் விதிகளின் கீழ் தற்போதுள்ள அமைப்பு முறை ஏற்படுத்தப்பட்டது.

அரசமைப்புச் சட்டத் திருத்தம் 73, பிரிவு 243அ-இன்படி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் கிராம சபை ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி பிறந்த நாளில் (அக்டோபர் 2) அவருக்கு மிகவும் அணுக்கமான, கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும். கிராம சபையைக் கூட்டும் அதிகாரம் மற்றும் பொறுப்பு அந்தந்த கிராம ஊராட்சித் தலைவருக்கு உள்ளது.

மூன்றடுக்கு ஊரக, உள்ளாட்சி முறை, தேர்தலில் வெற்றி பெறும் உறுப்பினர்களைக் கொண்டு அமையப் பெறுகிறது. ஆனால், கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கியதாக கிராம சபை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் கிடையாது. இந்த அமைப்பே மக்களாட்சியின் ஆணிவேராகும். ஏனைய அமைப்புகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான பயனாளிகளைத் தேர்வு செய்வது, பிற துறைகள் செயல்படுத்தும் திட்டங்கள் உள்ளூர் அளவில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பரிசீலித்து முடிவெடுப்பது, உள்ளாட்சி அமைப்புகள் நிறைவேற்றும் திட்டங்களை சமூகத் தணிக்கை செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை கிராம சபை நிறைவேற்றுகிறது.

ஒளிவு மறைவற்ற, மக்களாட்சிக்கான கருவியாக கிராம சபை செயல்படுகிறது. மேலும், அனைத்துத் தரப்பு மக்களையும் முழுமையாக உள்ளடக்கிய, சமூக நீதிக்கான, வலுவான அடித்தளமாகவும் கிராம சபை விளங்குகிறது. இதைப் பல்வேறு தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

கிராம சபையின் செயல்பாடு அந்தந்த கிராம ஊராட்சியின் செயல்பாட்டைப் பொருத்தே அமைகிறது. எனவே, கிராம ஊராட்சியை பலப்படுத்துவதும், வளப்படுத்துவதும் அவசியமாகிறது. கிராம ஊராட்சிகளின் திறன் மேம்பாடு ஒரு தொடர் தேவையாகும். பொதுமக்களின் விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் கிராம சபையின் வெற்றிக்கு இன்றியமையாதவை.

நிர்வாகப் பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடு கிராம ஊராட்சி/கிராம சபைகளில் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

கிராம சபை உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் சிறக்க, மக்களைத் தயார் செய்வது அவசியம். இதற்காக அரசு, கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தத் துறை சார்ந்த செயல்பாட்டாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டும். மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வெற்றிக் கதைகள் தனி பயனாக்கப்பட்டு மீட்டுருவாக்கப்பட வேண்டும். கல்வி மற்றும் தொடர்புப் பணிகள் திறம்பட கையாளப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகார, நிர்வாக, நிதி மற்றும் பணிகளின் பரவலாக்கல் குறித்து விவாதிக்க வேண்டியதும், மீளாய்வு செய்வதும் அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.