
கேரளத்தில் 38 உள்ளாட்சி வார்டுகளுக்கான இடைத்தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!
கேரளத்தில் காலியாக உள்ள 38 உள்ளாட்சி வார்டுகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக...

கேரளத்தில் 38 உள்ளாட்சி வார்டுகளுக்கான இடைத்தேர்தல் - கோப்புப்படம்
திருவனந்தபுரம்: கேரளத்தில் 38 உள்ளாட்சி வார்டுகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை(செப்.28) 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மின்வெட்டு, அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் வெள்ள நிவாரண உதவிகள் வழங்குவதில் தாமதம் போன்ற விவகாரங்கள் தொடர்பாக ஐக்கிய ஜனநாயக் முன்னணி (யுடிஎஃப்) அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், கேரளத்தில் 38 உள்ளாட்சி வார்டுகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை(செப்.28) 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மொத்தம் 385 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலில் யுடிஎஃப் வெற்றி பெற்ற பிறகு நடைபெறும் முதல் தேர்தலான இதில், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களைத் தவிர்த்து, மாநிலத்தின் மற்ற 12 மாவட்டங்களில் உள்ள 38 உள்ளாட்சி வார்டுகளில் இந்த இடைத்தேர்தல் நடைபெறுவதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களைத் தவிர்த்து 12 மாவட்டங்களில் 64 ஆண்கள், 62 பெண்கள் என மொத்தம் 126 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில், 3,09,713 வாக்காளர்கள் (1,64,241 பெண்கள், 1,45,468 ஆண்கள் மற்றும் 4 திருநங்கைகள்) வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக பாலக்காடு மாவட்டத்தில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்; அங்கு ஏழு உள்ளாட்சி வார்டுகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை(செப்.29) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
கடந்த மே மாதம் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உள்ளாட்சி வார்டு உறுப்பினர்களாக இருந்து சிலர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்த உள்ளாட்சி பதவிகளை ராஜிநாமா செய்ததாலும், சில இடங்களில் காலியானதாலும் இந்த இடைத்தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Polling commenced on Monday morning for the byelections to 38 local body wards in Keralam amidst the criticism from various quarters against the UDF government on issues...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






