மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

காயாக இருக்கும் சட்டப் பணிகள் ஆணைக் குழு பணியிடங்கள்

ஆலங்குடி: தமிழக சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் ஏழை, எளியோருக்கும், இயலாதவர்களுக்கும் சட்ட உதவிகளும், உரிமைகளும் தட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:23 am

கே. சுரேஷ்குமார்

ஆலங்குடி: தமிழக சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் ஏழை, எளியோருக்கும், இயலாதவர்களுக்கும் சட்ட உதவிகளும், உரிமைகளும் தடையின்றி முழுமையாகக் கிடைக்க 6.4.1977-ல் தொடங்கப்பட்ட தமிழ்நாடு மாநில சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகம், 1.11.1997 முதல் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு என அரசு அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழ்நாட்டில் 29 மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவும், 148 வட்ட சட்டப் பணிகள் குழுவும் நீதி மன்றங்களில் இயங்குகின்றன. இதில் 138 முதுநிலை நிர்வாக உதவியாளர்களும், 54 இளநிலை உதவியாளர்களும், 2 ஓட்டுநர்களும், 18 அலுவலக உதவியாளர்களும், 25 நிர்வாக அதிகாரிகளும், 3 உதவிச் செயலர்கள் உள்பட 240 பணியிடங்கள் உள்ளன.

இதில் எளியோருக்கு சட்ட உதவிகள் அளித்தல், ஆலோசனை மையப் பதிவேடுகளைப் பராமரித்தல், மாநில மற்றும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு புள்ளி விவரங்களை அனுப்புதல், மாநில கணக்காய்வுக்கு அந்தந்த நிதியாண்டில் தணிக்கை செய்வதற்கு தயாரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் 2010-2011, 2011-2012 செயல் திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதலின்படி அடிப்படைச் சட்டத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துவதற்காக பள்ளி, கல்லூரிகளில் சட்ட அறிவு மன்றம் தொடங்கப்படுகிறது.

ஊராட்சிகளில், சமரச மையங்களில், நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை 13-வது நிதிக் குழு பரிந்துரைப்படி மக்கள் நீதிமன்றங்கள் மூலம் விரைந்து முடித்தல் உள்ளிட்ட களப் பணிகளும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு பணியாளர்கள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். ஆனால், 1997-க்குப் பிறகு சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் எந்தப் பணியிடத்துக்கும் நேரடியாகவோ, பணி உயர்வு மூலமோ பணியாளர்களை நியமிக்காததால், ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகவே உள்ளன. அதிலும் சில மாவட்டங்களில் அதிகாரிகளே இல்லாமல் உதவியாளர்களும், உதவியாளர்கள் இல்லாமல் அதிகாரிகளும் பணியாற்றும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், இந்தக் குழுவில் பணியாற்றுவோர், கூடுதல் பணியாக பிற நீதிமன்றங்களில் பணியாற்றுகின்றனர். ஏழைகளுக்காகவும், அடிப்படைச் சட்டத்தை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகவும் தொலைநோக்குப் பார்வையோடு கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், ஆள் பற்றாக்குறையால் அதன் செயல்பாடு மங்கியுள்ளது.

பெயரளவில் மட்டும் இருக்கும் சட்டப் பணிகள் ஆணைக் குழுவைச் செயல்படுத்த வேண்டும் எனில் மாநிலம் முழுவதும் அனைத்து சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கும் பிரத்யேகமான கட்டட வசதிகளுடன் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி நிர்வாக அதிகாரி, நிர்வாக உதவியாளர், இளநிலை உதவியாளர், கள அலுவலர், அலுவலக உதவியாளர் போன்ற காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நீதிமன்றப் பணியாளர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.