Enable Javscript for better performance
how does underwear prove gender equality?!|‘அண்டர்வேர்’ எப்படி நிரூபிக்கும்?- Dinamani

சுடச்சுட

  

  ஆணும், பெண்ணும் சமம் என்பதை ‘அண்டர்வேர்’ எப்படி நிரூபிக்கும்? இதென்ன புது கலாட்டா?!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 13th June 2017 05:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gender_equality

   

  நடிகை ப்ரியங்கா சோப்ரா, பிரதமர் மோடி சந்திப்பின் போது; தொடை தெரியுமாறு கால் முட்டிக்கு மேல் ப்ரியங்கா அணிந்திருந்த உடை குறித்து அனேகம் பேர் இணையத்தில் மீம்ஸ், ட்ரால் என்று கலாய்த்தும், கண்டித்தும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர். ப்ரியங்கா மட்டுமல்ல உலகில் உள்ள ஒட்டு மொத்த பெண்களுமே தங்களது உடை மற்றும் சில தனிப்பட்ட விசயங்களுக்காக அடிக்கடி தங்களைச் சுற்றியுள்ளவர்களாலும், பொது வெளியிலும் விமர்சிக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

  குட்டையான வெள்ளை கவுன் அணிந்ததற்காக தீபிகா படுகோன் விமர்சிக்கப் படுகிறார், டங்கல் பிரபலம் பாத்திமா ஃபதர் சயீக் ரமலான் மாதத்தில் ஸ்விம் சூட் அணிந்ததற்காக ட்ரால் செய்யப் படுகிறார். விராட் கோலி கிரிக்கெட்டில் பெஸ்ட் ஸ்கோர் தராத ஒவ்வொரு முறையும் அனுஷ்கா ஷர்மாவின் உடை ட்ரால் செய்யப் படுகிறது. டென்னிஸ் ஆடும் போது சானியா மிர்ஸா அணியும் குட்டைப் பாவாடையை விமர்சித்தவர்கள் அனேகம் பேர்.

  இப்படி பெண்களை தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்? பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று தீர்மானிப்பவர்கள் யார்? அவர்கள் இன்ன உடை தான் அணிய வேண்டும், இப்படித்தான் பேச வேண்டும், இப்படித்தான் பழக வேண்டும் என்று யார் முடிவு செய்வது? இந்த உலகில் ஆண்களுக்கு இருக்கும் அதே சுதந்திரம் அணுவளவும் குறையாமல் பெண்களுக்கும் உண்டு தானே?! என்று “மிரர் நவ்” தொலைக்காட்சி சேனலின் ஆங்கரான ஃபாயி டிஸோசா தனது விவாத நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்பினார்.

  அந்த விவாத நிகழ்வில் கலந்து கொண்ட ‘யாசூப் அப்பாஸ்’ எனும் முஸ்லிம் மத குரு ஒருவர் உணர்ச்சி மேலீட்டில்;

  “அதெப்படி ஆணும், பெண்ணும் சமமாக முடியும்? சமம் என்று சொல்பவர்கள் ஆண்களைப் போல அண்டர் வேருடன் வந்து வேலை செய்து இருவரும் சமம் என்பதை நிரூபியுங்கள்”

  என்றார். இதைக் கேட்டு அந்த விவாத நிகழ்வில் பங்கேற்ற பிற பெண் பங்கேற்பாளர்களும், ஓரிரு நடுநிலையாளர்களும் அதிர்ச்சியாகி தங்களது கண்டனங்களை பதிவு செய்ய ஒருவருக்கொருவர் கூச்சலிட நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த விவாத நிகழ்ச்சி சந்தைக் கடையானது. ஆனாலும் ஆங்கர் ஃபாயி, சில நொடிகளில் தன்னை சமன்படுத்திக் கொண்டு அனைவரையும் அமைதிப் படுத்தி;

  “மெளலானா ஜீ; நீங்கள் என்னை, நான் கோயிலாக நினைக்கும் எனது வேலையிடத்தில், நான் ஆண்களுக்கு நிகராக வேண்டுமானால் அண்டர்வேர் அணிந்து அவர்களுடன் வேலை செய்ய வேண்டும் என்கிறீர்கள். இப்படிச் சொல்வதன் மூலம் நீங்கள் என்னைப் பயமுறுத்தி விட்டதாக நினைக்கிறீர்கள். என்னை பதில் பேச முடியாமல் அடக்கி விட்டதாக நினைக்கிறீர்கள். இல்லை ஒரு பெண் தான் எதை அணிய வேண்டும் என்று விரும்புகிறாளோ, அதைத் தான் அணிவாள். அவளை யாரும் உங்களைப் போல, இதை அணிந்தால் தான் நீ ஆணுக்கு சமம் என நிர்பந்திக்க முடியாது. பெண்கள் வேலை செய்யும் இடங்களுக்கு எல்லாம் சென்று இப்படியெல்லாம் சொல்வதால் பெண்களை மறுபடியும் இந்தச் சமூகத்தின் பொது வெளியில் இருந்து அகற்றி, அவளது வேலைகளைக் கெடுத்து, முடக்கி மறுபடியும் வீட்டின் சமயலறைக்குள் தள்ளி முக்காடிட்டு அடைத்து விட்டு ஆண்களால் ஆன ஒரு உலகத்தை இயக்கலாம் என்று நினைக்கிறீர்களா? அது நடக்காது. உங்களுக்கு ஒரு சேதி சொல்ல ஆசைப்படுகிறேன். பெண்களான நாங்கள், எங்களை ஆண்களுக்கு நிகரென நிரூபிக்க எதையும் செய்வதாக இல்லை. எங்கேயும் செல்வதாக இல்லை. நாங்கள் எங்களுக்குப் பிடித்த உடையை அணிந்து கொண்டு, எங்களுக்குப் பிடித்த வேலையைச் செய்து கொண்டு, எங்களுக்கு விருப்பமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு நீங்கள் வாழும் இதே உலகில் தான் இருக்கப் போகிறோம். தெரிந்து கொள்ளுங்கள் மெளலானா ஜீ, இந்தச் சேனலை இயக்குவது ஒரு பெண். அதனால் உங்களைப் போன்றவர்களை அத்தனை எளிதாக பெண்களை அச்சுறுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் இருக்கிறோம் ஃபாத்திமா, ப்ரியங்கா, சானியா, அனுஷ்கா, தீபிகா என உடை விசயத்தில் விமர்சிக்கப்படும் அத்தனை பெண்களின் பின்னாலும் நாங்கள் இருக்கிறோம். தினமும் தாங்கள் எந்த உடை அணிய வேண்டும் என்பதை முடிவு செய்வது அவர்களது தனிப்பட்ட விருப்பம். உங்களைப் போன்றவர்களை இந்த சமூகம் மரியாதைக்குரிய நபராகக் கருதுகிறது என்பதற்காக நீங்கள் சொல்வதையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் அந்தப் பெண்களுக்கு இல்லை.” அதை உணர்த்தவே இந்த நிகழ்ச்சி நடத்தப் பட்டது.”

  என்று படு காத்திரமாக தனது பதிலை தெளிவாக எடுத்து முன் வைத்தார்.

  மிரர் நவ் தொலைக்காட்சியின் இந்த விவாத நிகழ்ச்சி தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. 

  ஆங்கர் ஃபாயியின்  காத்திரமான பதிலைக் காண...

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai