மகள் குளிர்காய 2 மில்லியன் டாலரை நெருப்பில் எரித்த அப்பாவை பற்றி நீங்கள் அறிவீர்களா?

மகள் குளிர்காய 2 மில்லியன் டாலரை நெருப்பில் எரித்த அப்பாவை பற்றி நீங்கள் அறிவீர்களா?

கொலாம்பியாவை சேர்ந்த பாப்லோ எஸ்கோபர் என்கிற இவர் 1980-களில் பல வல்லரசு நாடுகளுக்கே சவால் விட்ட ஒரு பெரிய கல்ல கடத்தல் கூட்டத்தின் தலைவன். உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய பணக்கார குற்றவாளியும் இவர்தான்.

கொலாம்பியாவை சேர்ந்த பாப்லோ எஸ்கோபர் என்கிற இவர் 1980-களில் பல வல்லரசு நாடுகளுக்கே சவால் விட்ட ஒரு பெரிய கள்ளக் கடத்தல் கூட்டத்தின் தலைவன். உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய பணக்கார குற்றவாளியும் இவர்தான்.

ஒரு கால கட்டத்தில் உலகின் 80% கொக்கைன் கடத்தல் மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனைகளை நிகழ்த்தியது இந்தக் கூட்டம்தான். அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் 7-வது இடத்தை இவர் பிடித்தார். இந்தச் செய்தி வெளியானதும் அந்தப் பத்திரிகை நிறுவனத்தை அலைப்பேசியில் அழைத்த எஸ்கோபரின் மகன் செபஸ்டின் செய்தியில் குறிப்பிட்டிருந்த சொத்து விவரம் அவர்களிடம் இருக்கும் சொத்தில் கால் பங்கு கூட கிடையாது என்று சொல்லி சிரித்தாராம்.

பாப்லோ ஒவ்வொரு மாதமும் சுமார் 2,500 டாலர்களை அவரிடம் இருக்கும் பணக் கட்டுகளை கட்ட ரப்பர் பேண்ட் வாங்குவதற்குச் செலவழித்தாராம். இவருடைய 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள பணக் கட்டுகளை எலிகள் கடித்து வீணடித்துவிட்டதாக ஒரு தகவல் சொல்கிறது.

ஒரு முறை காவலர்களிடம் இருந்து தப்பித்து ஓடும்போது பாப்லோவும் இவரது குடும்பமும் எதிர்பாராத விதமாகக் காட்டிற்குள் இருக்கும் ஒரு சிறு வீட்டில் சிக்கிக் கொண்டார்களாம். அன்று இரவு கடும் குளிர் காரணமாக அவருடைய மகள் மனுவேலா எஸ்கோபர் குளிரில் நடுங்கியதால், சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர் பணக் கட்டுகளை நெருப்பில் கொளுத்தி மகளைக் குளிர்காய செய்தாராம். 

பல்லாயிரம் காவலர்கள், 200-க்கும் மேற்பட்ட நீதிபதிகள், அரசாங்க உயர் அதிகாரிகள் எனப் பல பேரைக் கொலை செய்த குற்றச்சாட்டு இவர் மீது இருந்தது. இதனால் இவரைக் கைது செய்ய கொலாம்பியா அரசு உத்தரவிட்ட போது 1.6 பில்லியன் டாலராக இருந்த நாட்டின் மொத்த கடனையும் தான் அடைப்பதாக இவர் முன் வந்தார், ஆனால் கொலாம்பியா அரசாங்கம் அதை மறுத்துவிட்டது. 

20 சதுர கிமீ நிலத்தில் தனது குடும்பத்திற்காக ஒரு பிரம்மாண்ட வீட்டை இவர் நிர்மாணித்து உள்ளார், அதில் ஆடம்பர அலங்காரங்களுக்கும் ஒரு படி மேலே சென்று உயிரியல் பூங்கா ஒன்றையே அதனுள் அவர் அமைத்துள்ளார். அந்தப் பூங்காவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சிங்கம், புலி, சிறுத்தை உட்படப் பல அரிய வகை மிருகங்களும் இருந்தன. மேலும் இமாலயன் எகரட்ஸ் என்கிற பறவைகள் ஒரே மரத்தில் தங்குவதற்கு 1 மில்லியன் டாலர் செலவில் பயிற்சி அளித்தாராம். உலகம் முழுவதிலும் இவருக்குச் சொந்தமாக 800 வீடுகளும், 14 வில்லாக்களும், ஒரு தீவும் இருந்தது.

மேலே நாடுகளில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பினாடாஸ் எனப்படும் கன்னை கட்டிக் கொண்டு மேலே தொங்கும் பொம்மையைத் தடியை வைத்து அடித்து உடைத்து அதிலிருந்து சாக்லேட்டுகளை கொட்டச் செய்யும் விளையாட்டு  மிகவும் பிரசித்திபெற்றது. ஆனால் இவருடைய குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களில் அந்த பினாடாஸில் சாக்லேட்டுகளுக்கு பதிலாக பணத்தை கொட்டி நிரப்பினாராம்.

1993-ம் ஆண்டு டிசம்பர் 1 தன்னுடைய 44-வது பிறந்த நாளை பாப்லோ கொண்டாடி முடித்திருந்த நிலையில் அதற்கு அடுத்த நாள் டிசம்பர் 2, 16 மாத தேடலுக்கு பின்பு பாப்லோவை சுட்டுக் கொன்றனர். ஆனால் பலரும் அவர் தற்கொலை செய்து கொண்டாதவும் கூறுகிறார்கள். பிரத பரிசோதனையின் போது அவரது மரணத்திற்குக் காரணம் காதின் வழியே நுழைந்த தோட்டா என்று கூறப்பட்டுள்ளது, ஆனால் அந்தத் தோட்டா எந்தத் துப்பாக்கியில் இருந்து சுடப்பட்டது என்பது இன்றும் புதிராகவே உள்ளது. அவருக்கு நெருக்கமானவர்கள் ஒரு வேளைத் தப்பிக்க முடியாமல் தான் காவலர்களிடம் சிக்கிக் கொண்டால் துப்பாக்கியால் தன் காதில் சுட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று அவரே கூறியதாக தெரிவிக்கிறார்கள்.

இன்றைய உலகத்தில் அனைவரும் தேடி ஓடும் பண நோட்டுகளைச் சர்வ சாதாரணமாகத் திகட்டும் அளவிற்குக் கையாண்டவர் இவர். தவறான வழியில் பணம் ஈட்டியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்ட போது “நான் ஒரு கண்ணியமானவன், பூக்களைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்கிறேன்” என்று பதிலளித்துள்ளார் பாப்லோ எஸ்கோபர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com