பிளேபாய் இதழின் நிறுவனர் ஹியூ ஹெஃப்னர் மறைந்தார்!

பிளேபாய் அது தொடங்கப்பட்டு மிகச்சில காலத்திற்குள்ளாகவே டீனேஜர்களுக்கு விலக்கப்பட்ட ஆதாமின் ஆப்பிள் போலவும், வயது வந்தவர்களுக்கு பைபிள் போன்ற தவிர்க்க முடியாத வேதமாகவும் ஆனது.
பிளேபாய் இதழின் நிறுவனர் ஹியூ ஹெஃப்னர் மறைந்தார்!
Published on
Updated on
2 min read

பிளேபாய் இதழ் நிறுவனர் மற்றும் பாலியல் புரட்சியின் மறுமலர்ச்சிக் குறியீடாகக் கருதப்பட்ட ஹியூ ஹெஃப்னெர் தனது இல்லத்தில் வயோதிகம் காரணமான உடல்நலக் குறைபாட்டால் நேற்றிரவு இயற்கை மரணம் எய்தினார்; என அவரது பிளேபாய் இதழ் இன்று அறிவித்துள்ளது. ஹியூ ஹெஃப்னருக்கு வயது 91.

ஹெஃப்னர் பிளேபாய் இதழைத் தொடங்கியது 1953 ஆம் வருடம். இரண்டாம் உலகப் போரினால் உண்டான பொருளாதார மந்தநிலை மெதுவாக விலகிக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் ஹெஃப்னர் மர்லின் மன்றோவின் நிர்வாணப் படங்களுடன் தனது முதல் இதழை ‘நகைச்சுவை மற்றும் மசாலா’ உறுதி என்ற பொருள் படத்தலைப்பிட்டு வெளியிட்டார். போரினால் உண்டான மன அழுத்தங்களைக் குறைத்துக் கொள்ளும் ஒரு உத்தியாக பலர் பிளேபாய் இதழை வாங்குக் குவிக்கத் தயாராக இருந்தார்கள். 

பிளேபாய் அது தொடங்கப்பட்டு மிகச்சில காலத்திற்குள்ளாகவே டீனேஜர்களுக்கு விலக்கப்பட்ட ஆதாமின் ஆப்பிள் போலவும், வயது வந்தவர்களுக்கு பைபிள் போன்ற தவிர்க்க முடியாத வேதமாகவும் ஆனது. மயக்கும் மாலை நேரங்களில், மங்கிய வெளிச்சத்தில் ஜாஸ் இசை கேட்டுக் கொண்டும் மிதமாகக் குடித்துக் கொண்டே, வெளியில் சொல்ல முடியாத தங்களது ஆழ்மனதின் ஆசைகளை அசைபோட விரும்புவர்களின் விருப்பத்துக்குரிய பத்திரிகைகளில் ஒன்றான மாறிப்போனது பிளேபாய். ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள்ளாகவே பிளேபாயின் சர்குலேஷன் 2 லட்சம் பிரதிகளைத் தொட்டது. 5 வருடங்களுக்குள் அதன் சர்க்குலேஷன் 10 லட்சம் பிரதிகளாகி அமெரிக்கப் பத்திரிகைகளில் முதலிடம் பெற்றது.

1970 களில் இந்தப் பத்திரிகை 70 லட்சம் வாசகர்களைக் கொண்டிருந்தது. 21 ஆம் நூற்றாண்டில் இணையப் பயன்பாடு அதிகரித்ததோடு, பிளே பாயின் போட்டிப் பத்திரிகைகளும் அதிகரித்ததால் அதன் சர்க்குலேஷன் 30 லட்சமாகக் குறைந்தது. இதனால் ஆண்டுக்கு 12 இதழாக வெளிவந்து கொண்டிருந்த பிளேபாய் இதழ் நாளடைவில் 11 ஆகக் குறைக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டில், பிளேபாய் தற்காலிகமாக தனது அட்டைப்படங்களில் நிர்வாண பெண்களின் படங்களை வெளியிடுவதை நிறுத்திக்கொண்டது, மீண்டும் என்ன காரணத்தாலோ, தனது பாரம்பரிய அடையாளமான நிர்வாணப் படங்களை  இந்த ஆண்டு முதல் அட்டையில் வெளியிட ஆரம்பித்திருந்தது.

அளவுக்கு அதிகமான கவர்ச்சியையும் நிர்வாணப் படங்களையும் அள்ளித்தந்த பிளேபாயால் அதன் நிறுவனர் ஹெஃப்னர் உலகளாவிய பிராண்டு அடையாளங்களில் ஒருவராகி விட்டார்.

அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள பிளேபாய் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது!

IMAGE COURTSY: usnews.com, wikipedia,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com