சர்ச்சை.. சுதந்தரப் போராட்ட வீரர்களுக்கு எதிராக வாஜ்பாயி அளித்த வாக்குமூலம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1942ம் ஆண்டு வெள்ளையேனே வெளியேறு போராட்டம் தீவிரமடைந்திருந்தது. ஆகஸ்ட் 27ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர் லீலாதரன் தலைமையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கூட்டம் ஆக்ராவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள பத்தேஷ்வர் கிராமத்தில் வனத்துறை அலுவலகக் கட்டத்தை சூழ்ந்து கொண்டது. கட்டடித்தின் உச்சியில் ஏறிய இளைஞர்கள் அங்கு தேசியக் கொடியைப் பறக்க விட்டதுடன், உயரே பறக்கிறது எங்கள் கொடி என்ற பாடலை உணர்ச்சிகரமாகப் பாடுகிறார்கள்.
உடனடியாக களத்தல் இறங்கிய காவல்துறை அங்கிருக்கும் இளைஞர்களைக் கைது செய்கிறது. லீலாதரன் தலைமறைவாக இருந்து பிறகு கைதாகிறார். சுமார் 37 பேர் மீது வழக்குப் பாய்கிறது. கைதான இளைஞர்களில் இருவர் அரசு அதிகாரியின் பிள்ளைகள். அவர்கள் லீலாதரனுக்கு எதிராக ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை அளித்து சிறை நடவடிக்கையில் இருந்து தப்புகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் வாஜ்பாயி.
அந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்களை தாம் நேரில் பார்த்ததாக நீதிபதி முன்பு வாஜ்பாயி வாக்குமூலம் அளித்ததோடு, உருதுவில் எழுதப்பட்ட வாக்குமூலத்தில் கையெழுத்தும் இட்டிருந்தார்.
இந்த சம்பவம் நடந்து சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கில ஊடகம், அந்த வாக்குமூலத்தை மொழிபெயர்த்து வெளியிட்ட போது இது மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இது பற்றி வாஜ்பாயிடம் கேட்டதற்கு, எனக்கு அப்போது உருது படிக்கத் தெரியாது என்று விளக்கம் அளித்திருந்தார்.
அந்த வாக்குமூலத்தில், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தாம் ஒரு விடுதலைப் போராட்ட வீரராக பங்கேற்கவில்லை என்றும், போராட்டத்தை வெளியில் இருந்து பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், போராட்டக்காரர்களை பின்தொடர்ந்து சென்றேனே தவிர, போராட்டத்தில் பங்கேற்கவில்லை. நான் யார் மீதும் பழிபோடவில்லை. பார்த்த விஷயங்களை மட்டுமே சொன்னேன் என்றும் கூறியிருந்தார்.