அன்பில் மகேஸுக்கு நவ. 4 வரை போலீஸ் காவல் தவெக ஆட்சியில் புதைக்கப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே டஃப் கொடுக்கும் தவெக ஆட்சி! அப்படி என்னதான் சொன்னார்கள்?சோப்ளாங்கி என்றால் என்ன அர்த்தம்? வைரலாகும் வார்த்தை!முரசு புயல் எச்சரிக்கை! சென்னையில் கடல் சீற்றம்; அலைகள் 2.1 மீ. உயரம் எழும்!சென்னைக்கு 180 கி.மீ. தொலைவில் முரசு தீவிரப் புயல்! எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?முரசு புயல் எங்கே இருக்கிறது? சென்னைக்கு ஜாக்பாட் அடிக்குமா?முரசு புயல்: சென்னையில் 11 விமான சேவைகள் ரத்து!கனமழை: சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!புதுக்கோட்டை, ஈரோட்டில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் திடீர் இடமாற்றம்!ஆம்னி பேருந்துகள் முன்பதிவுக்கு புதிய செயலி அறிமுகம்!

காதலுக்குத் தடையா?

தமிழர்களின் கலாசாரத்துக்கு எதிரான காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On :

தமிழர்களின் கலாசாரத்துக்கு எதிரான காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கை: ஐரோப்பிய நாட்டில் பிறந்த வாலன்டைன் இறந்த நாளான பிப்ரவரி. 14-ஆம் தேதியை அந்த நாட்டிலுள்ள சிறு பிரிவினர் காதலர் தினமாக கொண்டாடினர். தமிழகத்திலும் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்வு அரங்கேற்றப்பட்டு வருகிறது. இது நமது தேசத்தின் அடிப்படையையே கொச்சைப்படுத்துவதாகும். இந்து மதமும், இந்து மக்கள் கட்சியும் காதலுக்கும், காதலர்களுக்கும் என்றைக்கும் எதிரானவர்கள் அல்ல.

நமது புராணங்கள், இதிகாசங்களில் காதலின் புனிதம் போற்றப்பட்டுள்ளது. தமிழர்களின் இல்லற வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கும் அகநானூறு போன்ற பல காப்பியங்கள் நம்மிடையே உள்ளன. நாட்டின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பாதிக்காத கொண்டாட்டங்களையோ, பழக்க வழக்கங்களையோ நாம் ஏற்றுக்கொள்ள ஒரு போதும் தயங்கியதில்லை. ஆனால், தேச விரோத, பண்பாட்டு சீரழிவுக்கான நிகழ்வாக காதலர் தினம் உள்ளது.

பிப்ரவரி 14-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள், கோயில்கள், பூங்காக்கள், கடற்கரை போன்ற இடங்களில் காதலர் தினம் என்ற பெயரில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் உணவகங்களில் காதலர் தின கொண்டாட்டங்கள் என்ற பெயரில் ஜோடியாக வருபவர்களுக்கு இலவசமாக மது வழங்கப்படும் என்று கவர்ச்சி அறிவிப்புகள் வெளியிட்டு ஏற்பாடு செய்யப்படும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும். பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக நடைபெறும் ஆபாச காதலர் தின கொண்டாட்டங்களை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் இந்து மக்கள் கட்சி வலியுறுத்துகிறது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.