கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கும் புவிசார் குறியீடு கிடைக்குமா? 

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வாங்கித் தருவாரா வழக்கறிஞர் சஞ்சய்காந்தி என்று பொதுமக்கள் கோரிக்கையோடு காத்திருக்கிறார்கள்.
கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கும் புவிசார் குறியீடு கிடைக்குமா? 
Published on
Updated on
1 min read

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வாங்கித் தருவாரா வழக்கறிஞர் சஞ்சய்காந்தி என்று பொதுமக்கள் கோரிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடலை மிட்டாய்க்கு தனி மவுசு இருப்பதால் தொடர்ந்து அப்பெருமையை கோவில்பட்டி நகரம் தக்கவைத்துள்ளது. கடலைமிட்டாய் தயாரிக்க இயந்திரங்களை பயன்படுத்துவதில்லை என்று உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர். இன்றைக்கும் தொழிலாளர்களை கொண்டு தயாரிக்கப்படுவதால் அதன் மவுசு குறையவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கினால் தொழில் மிகவும் சிறப்படையும் என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தங்களின் வாழ்க்கை தரம் உயரும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஏற்கனவே பழநி பஞ்சாமிர்தம், மதுரை மல்லி, சுங்குடி சேலைகள், கொடைக்கானல் மலைப்பூண்டு, பத்தமடை பாய், காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், தஞ்சாவூர் தட்டு, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, ஈரோடு மஞ்சள், மகாபலிபுரம் சிற்பங்கள், திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி செட்டிநாடு கண்டாங்கி சேலைக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி இருக்கிறது. 

சமீபத்தில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாராகும் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது. இதனைதொடர்ந்து தற்போது கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கும் புவிசார் குறியீடு வழங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமக்காளம், மதுரை சுங்கிடி புடவை, ஆரணிப் பட்டு, சேலம் வெண்பட்டு, கோவை போரா காட்டன், தஞ்சை தலையாட்டி பொம்மை, தஞ்சை வீணை, தஞ்சை ஓவியம், நாச்சியார்குளம் குத்துவிளக்கு, தஞ்சாவூர் தட்டு, பத்தமடை பாய், மாமல்லபுரம் கற்சிற்பம், திருப்புவனம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்ணாடி சேலை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உள்ளிட்ட 19 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்கிக் கொடுத்துள்ளார் வழக்கறிஞர் சஞ்சய் காந்தி

அவர் நினைத்தால், கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு நிச்சயம் வாக்கித் தரமுடியும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com