தேவேந்திரகுல வேளாளர் இனத்தில் உட்பிரிவு ஜாதிகளை இணைக்க கேட்டு 20 கிராம மக்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு.
தேர்தல் தேதி அறிவித்தாலே மக்கள் தங்களுடைய தீர்க்கப்படாத பிரச்னைகளை வலியுறுத்தி போராடுவார்கள். அப்போது தான் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அந்த பிரச்னைகள் என்னவென்று முழுமையாக தெரியவரும். அது பொதுத்தேர்தலாக இருந்தாலும், சரி இடைத்தேர்தலாக இருந்தாலும், தீர்க்கப்படாத பிரச்னைக்காக மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பது என்பது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நான்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 21-ம் தேதி நடக்கிறது. தற்போது வேட்புமனு தாக்கல் வருகிற, 30-ம் தேதி வரை நடக்கயிருக்கிறது. இந்த நிலையில் நான்குநேரி தொகுதிக்குட்பட்ட 20 கிராமங்களில் உள்ள குடும்பன், பன்னாடி, காலாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், மற்றும் வாதிரியான் ஆகிய உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக்கோரி அந்த மக்கள் பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இதே போல் 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்தனர். அப்போது அரசு அதிகாரிகள், அந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டனர். மேலும் அப்போது தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வசந்தகுமார், அதிமுக விஜயகுமார், அந்த மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்தனர். தேர்தல் முடிந்தும் 3 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்கின்றனர்.
இதனால் தற்போது நடக்கயிருக்கும் இடைத்தேர்தலை புறக்கணிக்க போவதாக அந்த 20 கிராம மக்களும் கிராமங்களில் கருப்பு கொடிகளை தோரணங்களாக கட்டி அறிவித்துள்ளனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கத்தார் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் பலி!

அமோனியா வாயு கசிவு: பலியானோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு!

விதவைகள் நாள்: துணை இழந்தவர்களுக்கு தோள் கொடுத்த லூம்பா!

இந்தியாவில் 7,000 எரிபொருள் நிலையங்கள்!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




