மோடி தர்பார் 2019: அதிகார வரிசைப்படி அமைச்சர்கள் மற்றும் இலாகா ஒதுக்கீடுகள்! (முழுமையான பட்டியல்)

இந்த அமைச்சரவை லிஸ்ட்டில் கூட்டணியில் இடம்பெற்ற பிற மாநிலக் கட்சி எம் பிக்களின் பங்களிப்பு குறித்து தொடர்ந்து வரும் நாட்களில் ஆலோசிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தமிழகத்தைப் பொருத்தவரை
மோடி தர்பார் 2019: அதிகார வரிசைப்படி அமைச்சர்கள் மற்றும் இலாகா ஒதுக்கீடுகள்! (முழுமையான பட்டியல்)

இந்தியாவின் 16 வது பிரதம அமைச்சர்

நரேந்திர தாமோதர் தாஸ் மோடி

பதவியேற்ற அமைச்சர்கள் எண்ணிக்கை மொத்தம்: 57 (மோடியையும் சேர்த்து 58)

1. நரேந்திர மோடி : பணியாளர் நலன், அணுசக்தி , விண்வெளி கொள்கை சார்ந்த விவகாரங்கள் 

இலாகாவாரியாக கேபினட் அமைச்சர்கள் லிஸ்ட்:

  1. ராஜ்நாத் சிங்: பாதுகாப்புத்துறை அமைச்சர்
  2. அமித்ஷா: உள்துறை அமைச்சர்
  3. நிதின் கட்கரி: மீண்டும் சாலைப்போக்குவரத்துத் துறை
  4. சதானந்த கெளடா: ரசாயனம் மற்றும் உரத்துறை
  5. நிர்மலா சீதாராமன்: நிதி அமைச்சர்
  6. ராம்விலாஸ் பாஸ்வான்: உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் நலத்துறை
  7. நரேந்திர சிங் தோமர்: விவசாயத்துறை அமைச்சர்
  8. ரவி ஷங்கர் பிரசாத்: சட்டத்துறை, தொலைதொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
  9. ஹர்சிம்ரத் கெளர் பாதல்: உணவுப் பதப்படுத்தல் துறை
  10. தாவர் சந்த் கெலாட்: சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர்
  11. எஸ் ஜெய்சங்கர்: வெளியுறவுத்துறை அமைச்சர்
  12. ரமேஷ் போக்ரியால் (நிஷங்):  மனிதவள மேம்பாட்டுத்துறை
  13. அர்ஜூன் முண்டா: பழங்குடியினர் நலத்துறை
  14. ஸ்மிருதி இரானி: பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை மற்றும் ஜவுளித்துறை
  15. டாக்டர் ஹர்ஷ வர்த்தன்: சுகாதாரத்துறை
  16. பிரகாஷ் ஜவடேகர்: சுற்றுச்சூழல் வனம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை
  17. ஃபியூஸ் கோயல்: ரயில்வே அமைச்சர்
  18. தர்மேந்திரப் பிரதான்: மீண்டும் பெட்ரோலியத்துறை 
  19. முக்தர் அப்பாஸ் நவ்வி - சிறுபான்மையினர் நலத்துறை
  20. பிரகலாத் ஜோஷி: நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை
  21. மகேந்திரநாத் பாண்டே: திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர் நலத்துறை
  22. அரவிந்த் சாவந்த்:
  23. கிரிராஜ் சிங் கால்நடை, பால் மற்றும் மீன் வளத்துறை
  24. கஜேந்திர சிங் செகாவத்: ஜல் சக்தி துறை அமைச்சர்

இணையமைச்சர்கள் லிஸ்ட்:

  1. பக்கன் சிங் குலஸ்தே
  2. அஸ்வினி குமார் செளபே
  3. அர்ஜூன்ராம் மேக்வால்
  4. வி கே சிங்
  5. கிருஷன் பால் குஜ்ஜார்
  6. ராவ் சாஹிப் தாதாராவ் தான்வே
  7. கங்காபுரம் கிஷண் ரெட்டி
  8. பர்ஷோத்தம் ரூபாலா
  9. ராம்தாஸ் அதாவலே
  10. சாத்வி நிரஞ்சன் ஜோதி
  11. பாபுல் சுப்ரியோ
  12. சஞ்சீவ் பாயான்
  13. தோத்ரே சஞ்சய் ஷாம்ராவ்
  14. அனுராக் தாக்குர்
  15. சுரேஷ் அங்கடி
  16. நித்யானந்த ராய்
  17. ரத்தன் லால் கட்டாரியா
  18. வி. முரளிதரன்
  19. ரேணுகார் சிங் சருதா
  20. சோம் பிரகாஷ்
  21. ராமேஷ்வர் தேலி
  22. பிரதாப் சந்திர சாரங்கி
  23. கைலாஷ் செளத்ரி
  24. தேபஸ்ரீ செளத்ரி

இணையமைச்சர்கள் தனிப்பொறுப்பு லிஸ்ட்: 

  1. சந்தோஷ் குமார் கங்வார்
  2. ராவ் இந்திரஜித் சிங்
  3. ஸ்ரீபாத் யெசோ நாயக்
  4. ஜிதேந்திர சிங்
  5. கிரண் ரிஜிஜூ
  6. பிரகலாத் சிங் படேல்
  7. ஆர்.கே. சிங்
  8. ஹர்தீப் சிங் புரி
  9. மன்சுக் மாண்டவியா

இவர்களில் கீழ்க்காணும் இணையமைச்சர்கள் & இணையமைச்சர் தனிப்பொறுப்பு பதவிகளுக்கு சிலருக்கு மட்டுமே தற்போது இலாகாக்கள் குறிப்பிடப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளன. 

  1. ஜிதேந்திர சிங்: வடகிழக்கு மாநில மேம்பாட்டுத்துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு)
  2. கேரளாவைச் சார்ந்த முரளிதரன்: வெளியுறவுத்துறை இணையமைச்சர் (பொறுப்பு)
  3. பிரதாப் சந்திர சாரங்கி: சிறு குறு நடுத்தர தொழில், பால் மற்றும் மீன் வளத்துறை
  4. கிரண் ரிஜூஜூ: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை
  5. ராய் இந்திரஜித் சிங்: புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை  

பல அமைச்சர்களுக்கு இன்னமும் இலாகாக்கள் குறிப்பிடப்படவில்லை. கூடிய விரைவில் அவர்களுக்கான இலாகா ஒதுக்கீடுகள் வெளியிடப்படலாம்.

இந்த அமைச்சரவை லிஸ்ட்டில் கூட்டணியில் இடம்பெற்ற பிற மாநிலக் கட்சி எம்.பி.க்களின் பங்களிப்பு குறித்து தொடர்ந்து வரும் நாட்களில் ஆலோசிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தமிழகத்தைப் பொருத்தவரை மத்திய அமைச்சரவையில் ஆளும் அதிமுக தரப்பிலிருந்து ஒரே ஒரு அமைச்சர் பதவி கூட குறிப்பிடப்படவில்லை. துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத் குமாருக்கு அமைச்சர் பதவி எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த நம்பிக்கை பொய்த்துள்ளது. இது குறித்த செய்தியாளர் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் பாஜகவின் தமிழகத் தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல. கணேசன், அமைச்சரவையில் அதிமுகவை சேர்த்துக் கொள்வது பற்றி எதிர்காலத்தில் திட்டங்கள் இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

இப்போதைக்கு மேற்குறிப்பிட்டவர்கள் மட்டுமே மோடி தர்பாரில் பங்கு பெறக்கூடிய அமைச்சர்கள் என இதுவரையிலுமான அறிவிப்புகள் கூறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com