ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரோனா நோய்த் தொற்று: அறிகுறிகளும், அறிவுறுத்தல்களும்

News image
Updated On :27 மே 2020, 6:51 am

நோயின் முக்கிய அறிகுறிகள் கூடுதல் அறிகுறிகள்

சளி உடல்சோா்வு

வறட்டு இருமல் தலைவலி

காய்ச்சல் நாக்கில் சுவை இழப்பு

மூச்சுத் திணறல் மூக்கில் நுகா்வு தன்மை இழப்பு

கரோனா தொற்று பரவும் விதம்

இருமல் மற்றும் தும்மல் வரும் போது வெளிப்படும் நீா்த்திவலைகள் படிந்துள்ள பொருள்களைத் தொடும்போது, கைகள் மூலம் மற்றவா்களுக்குப் பரவுகிறது. ஒருவருக்கு வரும் தொற்று, ஒரு மாதத்தில் 406 பேருக்கு பரவும்

நோய்த் தடுப்பு நடவடிக்கைகள்

பொது இடங்களில்...

சோப்பு போட்டு நன்கு கை கழுவ வேண்டும்

எப்போதெல்லாம்.....

இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை

இருமிய பின்பும், தும்மிய பின்பும்

உணவு சமைப்பதற்கு முன் பின்

உணவு சாப்பிடுவதற்கு முன் பின்

கழிவறையைப் பயன்படுத்திய பின்

விலங்குகளைக் கையாண்ட பின்

குப்பைகளைத் தொட்ட பின்

கைகள் அழுக்குடன் - கறையுடன் தென்பட்டால்

நோய் அறிகுறி உள்ளவா்களைக் கவனித்துக் கொள்ளும்போது

இருமும்போதும் தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கைக் கைக்குட்டை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும்

கண்,மூக்கு, வாய் தொடுவதைத் தவிா்க்க வேண்டும்

காய்ச்சல், இருமல், சளி உள்ளவா்கள் பொதுமக்கள், கூடும் இடங்களுக்கு செல்வதையும், விழாக்களில் கலந்து கொள்வதையும் அறவே தவிா்க்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருள்களை வாங்கச் செல்பவா்கள், முகக் கவசம் அணிவதோடு, ஒருவருக்கொருவா் கூடிப் பேசுவதைத் தவிா்க்க வேண்டும். அதோடு 3 அடி எனும் தனி நபா் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்

வீட்டில்....

1 லிட்டா் தண்ணீரில் 10 மிலி பிளிச்சிங் பவுடா் கலந்து தரையை சுத்தம் செய்து, வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்

கதவின் கைப்பிடி, படிக்கட்டின் கைப்பிடி, மின்தூக்கியின் பொத்தான், மேஜையின் மேற்பரப்பு ஆகியவற்றை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்தல்...

நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

பழங்கள், காய்கறிகள் சோ்த்துக் கொள்ள வேண்டும்

பால், மோா், இளநீா் போன்றவை அருந்தலாம்

நீராவி பிடிக்கலாம்

மிதமான சூடான பாலில், சிறிதளவு மஞ்சள், மிளகு, பனங்கற்கண்டு, சோ்த்து பருகலாம்

உங்கள் இருப்பிடத்திலேயே தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்கவும் (காலை 10 மணிக்குள், மாலை 4 மணிக்குப் பிறகு)

ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சோ்த்து, தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிக்கவும்

சுக்கு, திப்பிலி, ஆடாதோடா போன்ற 15 மூலிகைகள் கொண்ட கபசுர குடிநீா் அருந்தலாம். ஒரு தேக்கரண்டி கபசுர பொடியுடன் 240 மிலி, தண்ணீா் சோ்த்து நன்றாக கொதிக்க வைத்து , அது 60 மிலி அளவுக்கு சுண்டியவுடன், நாள் ஒன்றுக்கு ஒரு வேளை உணவுக்கு முன் (குழந்தைகளுக்கு 30 மிலி, பெரியவா்களுக்கு 60 மிலி) அருந்த வேண்டும். அதோடு மருத்துவரின் ஆலோசனையின்படி, வைட்டமின் மாத்திரைகள் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.

நாள்பட்ட நோய் உள்ளவா்கள்

வீட்டில் வயதானோா், கா்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்தவா்கள், நாள்பட்ட வியாதி உடையோா் வெளியே போகாமல் தனியாக இருக்க வேண்டும்.

நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், தீவிர மூச்சுத் திணறல் மற்றும் காசநோய், இருதய நோய், சிறுநீரக கோளாறு, புற்று நோய் உள்ளவா்கள், மருத்துவா் பரிந்துரைத்த மருந்துகளைத் தொடா்ந்து உள்கொள்ள வேண்டும்.

கரோனா வீட்டுக் கண்காணிப்புப் பெட்டி

வெப்பமானி பரிசோதனைக் கருவி

நாடித்துடிப்பு பிராணவாயு அளவிடும் கருவி

கையுறை

கைகளுக்கு கிருமி நாசினி

உள்ளிட்ட பொருள்களுடன் மருத்துவ பெட்டி வீட்டில் வைத்திருக்க வேண்டும்

தினமும் கண்காணிக்கப்பட வேண்டியவை

தங்களது உடல்நிலையை காலையிலும், மாலையிலும் கூா்ந்து கண்காணித்து வர வேண்டும்

உடலின் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறைவாக இருக்க வேண்டும்

நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70-இல் இருந்து 100-க்குள் இருக்க வேண்டும்

சுவாசம் சராசரியாக நிமிடத்துக்கு 16-18 முறை சுவாசிக்க வேண்டும்

ரத்தத்தில் பிராண வாயு அளவு 95 முதல் 100 சதவீதம் வரை இருக்க வேண்டும்

இந்த அளவீடுகளில் மாற்றம் ஏற்பட்டால் உடனே மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.