எரியும் இலங்கை: இந்தியாவுடனான ஒப்பந்தங்கள்; நேரடி ரிப்போர்ட்-27

இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச- மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச- மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடப்பட்டது. அந்த ஆறு ஒப்பந்தங்களையும் சுருக்கமாக இங்கே குறிப்பிடுகிறேன்.

  _ இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையில் பிரத்தியோக டிஜிட்டல் அடையாள முறையை அமல்படுத்துதல்.

 _ கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை.

  _ யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள அனலைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு ஆகியமூன்று தீவுகளிலும் கலப்பு மின்சக்தி திட்டங்களை அமல் படுத்துதல்.

   _  இலங்கையில் மீன்பிடித் துறைமுகங்கள் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பை நல்குதல்.

  _  காலி மாவட்டத்தில் உள்ள 200 பாடசாலைகளில் பிரத்யோகமாக கல்வி மென் பொருள்களுடன் கூடிய ஸ்மார்ட் அட்டைகளோடு நவீன கணித ஆய்வுக் கூடங்களை அமைத்தல்.

 _ வெளிநாட்டு சேவைக்கான சுஷ்மா சுவராஜ் நிலையம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிலையம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

இவற்றுள் இரண்டாவதாகக் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமானது, இந்திய அரசாங்கத்தின் 6 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியோடு இலங்கையில் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் இந்திய உளவு விமானங்கள் இலங்கை வானத்தைப் பயன்படுத்தும். இலங்கை தன்னுடைய கடல் மற்றும் வான் பாதுகாப்பை இந்தியாவுடன் நேரிடையாக பகிர்ந்து கொள்வதாக கருதலாம். கடல் பாதுகாப்பை சர்வதேச உடன்படிக்கைக்கு அமைய உறுதிப்படுத்தவும், இப்பிராந்தியத்தில் பாதிப்புக்குள்ளாகும் கப்பல்கள் தொடர்பான தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு இந்த நிலையம் மிகவும் அவசியம். மூன்றாவது உடன்படிக்கையை முன்பே இலங்கை சீனாவுடன் மேற்கொண்டிருந்தது. இப்போது சீனாவுடன் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு, இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இன்னும், சில ஒப்பந்தங்கள் நிலுவையில் உள்ளது.

குறிப்பாக, கடந்த ஆண்டு மட்டும் இலங்கைக்கு அரசுக்கு சொந்தமான இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) 61,886 மில்லியன் ரூபா நட்டமடைந்திருந்தது.

இலங்கை மின்சார சபைக்கு 929 மில்லியன் ரூபாயும் அதே போல தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை (National Water Supply and Drainage Board) 825 மில்லியன் ரூபா நட்டத்தையும் சந்தித்தது.

இது மட்டுமின்றி விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் (Airport and Aviation Services) ரூ. 1,792 மில்லியன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (Sri Lankan Airlines) ரூபா 24,800 மில்லியன் நட்டத்தையும் எதிர்கொண்டது.

அதே போல இலங்கை போக்குவரத்து சபை (Sri Lanka Transport Board) 3,215 ரூபாய் நட்டத்தை சந்தித்து இருந்தது.

இது தவிர, அரசு பொறியியல் கூட்டுத்தாபனம் (State Engineering Corporation) 730 மில்லியன் ரூபாய் நட்டமும் மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்திற்கு (Central Engineering Consultancy Bureau) 6 மில்லியன் ரூபாய் நட்டமும் ஏற்பட்டுடிருந்தது.

அதே போன்று அரச அபிவிருத்தி மற்றும் கட்டுமான நிறுவனம் (State Development and Construction Corp) 106 மில்லியன் ரூபாய் நட்டமடைந்து இருந்தது.

அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் (Sri Lanka State Plantations Corporation) ரூ.95 மில்லியன் நட்டத்தை சந்தித்து இருந்தது.

ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை (Janatha Estates Development Board) 118 மில்லியன் ரூபாய் நட்டத்தை சந்தித்து இருந்தது

களுபோவிடியன தேயிலை தொழிற்சாலைற்கு (Kalubovitiyana Tea Factory) 34 மில்லியன் ரூபாயும் இலங்கை சுயாதீன தொலைக்காட்சி சேவை (Independent Television Network Ltd) 244 மில்லியன் ரூபாய் நட்டத்தையும் சந்தித்தது.

இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி நிறுவனம் (Sri Lanka Rupavahini Corporation) ரூபா 56 மில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொண்டது.

இலங்கை கைப்பணி பொருள்கள் சபை (Sri Lanka Handicraft Board) ரூ.58 மில்லியன் நட்டத்தை சந்தித்து இருந்தது.

சதொச நிறுவனத்திற்கு (Lanka Sathosa Ltd) ரூ.151 மில்லியன் நட்டம் ஏற்பட்டிருந்தது.

இலங்கை அச்சக கூட்டுத்தாபனம் (State Printing Corporation) ரூ.226 மில்லியன் நட்டமும் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனம் (Ceylon Fisheries Corporation) 43 மில்லியன் ரூபாயும் இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு (Ceylon Fishery Harbour Corporation) ரூ.83 மில்லியன் நட்டம் ஏற்பட்டு இருந்தது.

இது போதாதென்று ஹோட்டல் அபிவிருத்தி நிறுவனம் (Hotel Developers Lanka Ltd) ரூ.153 மில்லியன் ரூபாய் நட்டத்தை சந்தித்து இருந்தது.

இந்த நிலைமை வெறுமனே அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் மட்டுமின்றி அரசாங்கத்தின் சகல அமைச்சகங்கள், துறைகள், கூட்டுத்தாபனங்கள் என மத்திய அரசின் நிர்வாக அலகுகள் தொடக்கம் மாவட்ட அரச செயலகங்கள் வரை தொடர்கின்றது.

குறிப்பாக வினைத்திறனற்ற நிதி நிர்வாகம் , வளங்களின் வீண் விரயம், ஊழல் மோசடிகள் , அளவுக்கதிமான அரச ஊழியர்கள் , அரசியல் தலையீடுகள் , அரசியல் நியமனங்கள் போன்ற பல காரணங்களினால் அரச நிறுவனங்கள் தோல்வியடைகின்றன. தோல்வியடைகின்ற அரச நிறுவனங்கள் சர்வதேச ரீதியாக ஏற்படும் விலை தளம்பல்களை எதிர்கொள்ள முடிவடைவதில்லை.

இதனால் தோல்வியடைகின்ற நிறுவனங்கள் தங்கள் நட்டங்களை  பொதுமக்கள் மீது சுமத்தி விடுகின்றார்கள்

குறிப்பாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கடந்த ஆண்டு மட்டும் ஏறத்தாழ 62,000 மில்லியன் ரூபாய் நட்டமடைந்திருக்கின்ற நிலையில் சர்வதேச விலை மாற்றங்களை தனித்து எதிர்கொள்ள முடியாமல் தவிர்க்கின்றது.

ஆகவே, வெறுமனே மீள மீள கடன்களைப் பெற்று கொள்வதன் மூலம் மேற்படி நெருக்கடிகளை கட்டுப்படுத்த முடியாது.

சக்தி மிக நாடுகளாக உருவாகி வரும் ருவாண்டா, பங்களாதேஷ், வியட்நாம், எத்தியோப்பியா போன்று இலங்கை தனது செயன்முறைகளையும் அரச நிறுவனக் கட்டமைப்புகளையும் மீள கட்டி எழுப்புவதன் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்.

                                                                                                                                 - தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com