எல்லாவற்றுக்கும் மேலாக இன்னும் நீங்கள் சமாதானம் ஆகவில்லையா? என்று கேட்டுவிட்டு அவர் வீசும் அடுத்த குண்டுதான் அரசர்கள், வம்சங்கள், இனக்குழுக்களின் பெயர்கள் இடப்பெயர்களாக மல்லா, சக்கியா, போரஸ், மகதா, நந்தா, அசோக், சந்திரகுப்தா, மௌரியா, கனிஷ்கா, காரவேலா, சாதவாகனா, குப்தா என்று ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் போன்ற இடங்களில் இருப்பதை சுட்டிக்காட்டி, காரவேலா தொடர்புடைய கத்திக்கும்பா கல்வெட்டு “திரமிளா சங்காத்த” என்று தென்புலத்துடன் உள்ள தொடர்புகளைச் சொன்ன கல்வெட்டு பெயரோடு இருப்பதையும், மேலும் ஹர்ஷா, சாளுக்கிய, ராஷ்டிரகூட என்ற பெயர்கள் இருப்பதையும் வெளியிட்டு வியப்பில் உறைய வைத்தார்.