FOLLOW US

ON GOOGLE DISCOVER

மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!எச்.டி.எப்.சி. வங்கியின் ஊழியர்கள் எண்ணிக்கை கணிசமாக சரிவு!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

மூன்று தலைமுறைப் பெண்களின் ஆழ்மனக் குரல் - எஸ். ஜானகி!

உணர்வுகளை வெளிப்படுத்தவே இடம் கொடாத ஒரு சமூகக் கட்டமைப்பில், பெண்களின் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளின் வடிகாலாக இருந்தவர் ஜானகி.

News image

பாடகி எஸ். ஜானகி

Updated On :13 ஜூலை 2026, 8:09 pm IST

பூங்குழலி

எஸ். ஜானகி அவர்கள் பலருக்கு ஒரு மகளாக, சகோதரியாக, தோழியாக, காதலியாக, மனைவியாக, தாயாக இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு அவர் நானாக இருந்த தருணங்களே அதிகம்.

என்னுடைய எல்லா உணர்வுகளுக்குமான குரல் அவருடையதாக இருந்திருக்கிறது. எனக்கு மட்டுமல்ல ஏறத்தாழ மூன்று தலைமுறைப் பெண்களுக்கு அவர்களின் ஆழ்மனக் குரலாய் அவர் ஒலித்தார்.

அதிலும் இன்று போல் அல்லாமல், பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவே இடம் கொடாத ஒரு சமூகக் கட்டமைப்பில், அவர்களின் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளின் வடிகாலாக இருந்தவர் ஜானகி.

ஜானகி யமுனையாற்றங்கரையில் கண்ணனைத் தேடிய போது, பெண்கள் அவருடன் சேர்ந்து உருகவில்லை. மாறாக, பெண்கள் தங்கள் கண்ணனைத் தேடும் போது அவர்களுடன் அவர் துணை நின்றார்.

இளம் பருவத்தின் தொடக்கத்தில் நின்று உலகை ரசிக்கும் பெண்ணுடன் "புத்தம் புது காலை..."யை ரசிப்பதில்.. கட்டுக்களிலிருந்து விடுபட்டு சுதந்திர உணர்வை அனுபவிக்கும் பெண்ணுடன் இணைந்து "காற்றுக்கென்ன வேலி..." என்று கடற்கரை மணல் வெளியெங்கும் கேட்கும் வகையில் உரத்துப் பாடுவதில்.. வாழ்வின் வேதனைகளோடு தன் மகனை கொஞ்ச நினைக்கும் பெண்ணுடன் சேர்ந்து, "சொல்லவா நான் ஆராரோ... நம் சொந்தங்கள் இங்கு யார் யாரோ... உந்தன் கண்ணில் ஏன்தான் நீரோ" என்று விம்முவதில்… வெளிப்படுத்த இயலா காதலின் துயரில் நிற்கும் பெண்ணின் சார்பாக, அவளுடைய காதலனிடம் "காற்றில் எந்தன் கீதம் காணாமல் ஒன்றைத் தேடுதே" என்று தூது செல்வதில் என..

ஒரு பெண்ணின் மகிழ்ச்சியை, துக்கத்தை, காதலை, தாபத்தை, கோபத்தை, தயக்கத்தை, வெட்கத்தை, குழப்பத்தை, திமிரைக்கூட வெளிப்படுத்த குரல் தந்தவர் ஜானகி. அதிலும், அவள் என்ன உணர்கிறாளோ, அந்த உணர்வை அப்படியே தன் குரலில் கொண்டு வந்தவர் அவர். பாடத் தெரியாத பெண்களுக்கும், அந்த வரிகளும் இசையும் மனதுக்கு மிக நெருக்கமாகத் தோன்றினாலும் அதைத் தாங்களே பாட முடியாத தருணங்களில், அவர்களுக்காக வந்து அவர்களுடைய உணர்விலேயே பாடினார். அதுதான் ஜானகி.

இன்றும் தங்கள் உணர்வுகளை உலகுக்குத் தெரிவிக்க, வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ்களில் ஜானகியையே துணைக்கு அழைக்கின்றனர் பல பெண்கள்.

தமிழ் அவரது தாய்மொழி அல்ல. ஆனாலும் பாடல் வரிகளை இசைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பாடாமல், அதன் உணர்வையும் களத்தையும் முழுமையாக உள்வாங்கி தன் குரலில் கொணர்ந்தார். தமிழில் மட்டுமல்ல 20 மொழிகளில் தான் பாடிய 48,000 பாடல்களில் ஒவ்வொன்றுக்கும் இதைச் செய்வது எத்துணை பெரிய உழைப்பு! இந்த மெனக்கெடலையே இசைஞானி இளையராஜா தனது இரங்கல் செய்தியில் "ஜானகி ஒரு கடின உழைப்பாளி" என்று குறிப்பிட்டார்.

எஸ்.பி.பியும் எஸ். ஜானகியும் மக்கள் மனதிற்கு நெருக்கமாக இருப்பது இதனால்தான். அவர்கள் என்றும் நம் குரலாய் ஒலித்துக்கொண்டே இருப்பார்கள்.

Summary

The inner voice of women across three generations – S. Janaki

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.