தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஏனிந்த அலட்சியம்?

அண்மையில் சத்தீஸ்கரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 11 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.

Updated On :13 மார்ச் 2014, 8:23 pm

அண்மையில் சத்தீஸ்கரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 11 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனமும் இரங்கலும் தெரிவித்துவிட்டனர். வழக்கம் போல் இந்த நாளும் கடந்து போய்விட்டது. ஆனால் தாக்குதலில் உயிரிழந்த இளம் வீரர்களின் குடும்பங்களுக்கு இது ஆறாத வேதனை என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

"மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள், இது போன்ற வீர மரணங்களை சந்திப்பது சகஜமானது' என நமது அரசாங்கம் சப்பைக்கட்டு கட்டினாலும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளும், தேவையான ஒத்துழைப்பும் இல்லாததே இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கியக் காரணங்கள் என்பதை மறுக்க முடியாது.

நக்ஸல்கள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில், எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை பயன்படுத்த முடியாது என்பதால், அவர்களுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டதே

சி.ஆர்.பி.எஃப். என்னும் துணை ராணுவ படை. நக்ஸல்கள் நிறைந்த மாநிலங்களில் இவர்கள் சிறுசிறு குழுக்களாகச் சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

எதிரிகள் குறித்த ரகசிய தகவல்களை தெரிவிக்க ராணுவத்தினருக்கு உளவு அமைப்பு இருப்பதைப் போல் நக்ஸல்கள் குறித்தோ, அவர்களின் நடவடிக்கைகள் குறித்தோ சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு தகவல் சொல்லும் உளவுப் பிரிவு ஏதுவும் இல்லை.

நிரந்தரமாக ஓர் இடம் என இல்லாமல், இடம் விட்டு இடம்

பெயர்ந்துக் கொண்டேயிருக்கும் சி.ஆர்.பி.எஃப். படையினருக்கென தனியாக உளவு அமைப்பை ஏற்படுத்துவதென்பது இயலாது என அரசாங்கம் தெரிவிக்கிறது. அதனால், நக்ஸல்கள் குறித்த தகவல்களை அறிய, தாங்கள் முகாமிட்டுள்ள சுற்றுப்பகுதிகளில் உள்ள பொது மக்களில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களையே ரகசிய உளவாளிகளாக சி.ஆர்.பி.எஃப். பயன்படுத்த நேரிடுகிறது.

அரசாங்க சம்பளமும், முறையான பயிற்சியும் பெற்று பணியாற்றும் உளவுத்துறையே சில நேரங்களில் காலை வாரிவிட்டுவிடுகிற நிலையில், இந்த "உளவாளி'களின் நம்பகத்தன்மை என்பது கேள்விக்குறியே. மேலும் ஓரிடத்துக்கு அனுப்பப்படும் சி.ஆர்.பி.எஃப். படைக் குழுவில் அந்த வட்டார மொழி தெரிந்தவர்கள், ஒரு சில குழுக்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். பெரும்பாலான குழுக்களில் உள்ள வீரர்களில் ஒருவருக்கு கூட அவர்கள் முகாமிட்டிருக்கும் வட்டார மொழி தெரிந்திருப்பதில்லை. இதனால் அப்பகுதி மக்களை தங்களின் உதவிக்கு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு இல்லை.

இவைதவிர, நக்ஸல்களை ஒடுக்கும் நடவடிக்கையில் இவர்கள் முகாமிட்டுள்ள மாநிலங்களின் அரசுகளும், போலீஸாரும் கூட இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவதில்லை என பரவலான குற்றச்சாட்டினை சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் முன்வைக்கின்றனர்.

இது போன்ற காரணங்களால், கொரில்லா தாக்குதலில் கைதேர்ந்த நக்ஸல்களின் அதிரடி தாக்குதல்களுக்கு நம் வீரர்களால் ஈடு

கொடுக்க முடிவதில்லை. இதனால் தொடர்ந்து சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பலியாகி வருவதையும் தடுக்க இயலவில்லை. இனி வரும் காலங்களிலாவது, இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க அரசு சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

முதல்கட்டமாக, நக்ஸல்கள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில், உள்ளூர் போலீஸாரின் ஒத்துழைப்போடு, நக்ஸல்களைக் கண்காணித்து, தங்கள் மாநிலத்தில் முகாமிட்டுள்ள சி.ஆர்.பி.எஃப். படையினருக்கு தகவல்கள் தெரிவிக்கும் நிரந்தர உளவு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அடுத்ததாக, குறிப்பிட்ட மாநிலத்துக்கு அனுப்பப்படும் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் அடங்கிய குழுவில், அந்தந்த வட்டார மொழி தெரிந்த வீரர்கள் ஒரு சிலராவது இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவற்றை விட முக்கியமாக, மக்களின் பாதுகாப்பு ஒன்றையே மனதில் கொண்டு நக்ஸல்களை ஒடுக்க தங்களின் மாநிலத்துக்கு வரும் சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு முழு ஒத்துழைப்பை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பையும், இறையாண்மையின் ஆணிவேரையும் அசைத்துப் பார்க்க நினைக்கும் நக்ஸல்களை ஒழிக்க, துணை ராணுவ அமைப்பை ஏற்படுத்திவிட்டால் மட்டும் போதுமா?

அந்த அமைப்புக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்கள், ஆயுதங்கள், நவீன தகவல் தொடர்பு வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தித் தருவதும் இந்திய அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.