உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு ஆப்பிரிக்க அமெரிக்கரான ஒபாமா இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றாலும்கூட, இன்னமும் அந்நாட்டில் இனவெறுப்பு நீறுபூத்த நெருப்பாக இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் ஃபெர்குசன் கலவரம்.
அமெரிக்காவின் மிùஸளரி மாகாணத்தில், ஃபெர்குசன் நகரில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி, 18 வயது கருப்பின இளைஞரைச்
சுட்டுக்கொன்ற காவலர் மீது நடவடிக்கை தேவையில்லை என்று விசாரணை நடத்திய பெருநடுவர் குழு இரு நாள்களுக்கு முன்பு அளித்த தீர்ப்புக்கு எதிராக அமெரிக்காவின் பல இடங்களிலும் வன்முறை நடந்து கொண்டிருக்கிறது.
காவல் துறை அதிகாரிக்கும் கருப்பின இளைஞருக்கும் ஏற்பட்ட தகராறு வெறும் "ஓரம்போ' விவகாரம்தான். கொல்லப்பட்டிருக்கும் மைக்கேல் பிரவுனும் அவரது தோழனும் இந்தியர் ஒருவர் நடத்தும் கடையிலிருந்து ஒரு பாக்கெட் சிகரெட்டை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் வெளியேறி இருக்கிறார்கள். அவர்கள் போதையில் இருந்தார்களா என்பது தெரியவில்லை.
மைக்கேல் பிரவுன் தனது நண்பருடன் சாலையின் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்து சென்றபோது, நடைபாதைக்குப் போ என்று காவலர் டாரென் வில்சன் கூறியதும், அவரது கைத்துப்பாக்கியை மைக்கேல் பிரவுன் பிடுங்க முற்பட்டதும், அதைத் தொடர்ந்து எழுந்த தகராறும்தான் இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமாக அமைந்தன என்பது காவல் துறையின் கூற்று.
விசாரணை நடத்திய பெருநடுவர் குழுவுக்கு, போதுமான சாட்சிகள் இல்லை. தடயங்களும் மைக்கேல் பிரவுனுக்கு ஆதரவாக இல்லை. ஆகவே குற்ற நடவடிக்கை தேவையில்லை என்று கூறியுள்ளது. ஆனாலும், அமெரிக்கர்களில் பலர் இந்தத் தீர்ப்பு சரியில்லை என்ற கருத்து கொண்டுள்ளனர். "காவலரின் நடவடிக்கை தற்காப்பு என்றே வைத்துக்கொண்டாலும், எதற்காக வெறித்தனமாக 12 முறை துப்பாக்கியால் சுட்டார்' என்று கேட்கின்றனர்.
மைக்கேல் பிரவுன் சுட்டுக் கொல்லப்பட்ட அடுத்த நாளே, அவர் ஒரு திருடர் என்பதைக் காட்டுவதற்காக, அவர் ஒரு கடையில் திருடிக்கொண்டிருக்கும் விடியோ காட்சிகளை ஃபெர்குசன் காவல் துறை வெளியிட்டது முதல் இந்தச் சம்பவம் காவல் துறைக்கு எதி
ரானதாகத் திரும்பியது. துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தவும், அதிகாரியைக் காப்பற்றவும்தான் இந்த விடியோக் காட்சிகள் வெளியிடப்பட்டன என்ற கொந்தளிப்பு அப்போதே தொடங்கிவிட்டது.
உலகம் முழுவதிலும் காவல் துறையின் மனப்போக்கு, தனக்கு எதிராகக் குரல் எழுப்புவோரை அறியப்பட்ட குற்றவாளியாக மாற்ற முனைவதுதான். இதில் அமெரிக்கா, இந்தியா என்கிற வேறுபாடெல்லாம் கிடையாது என்று தெரிகிறது.
வெள்ளை நிறத்தவருக்கும் கருப்பு நிறத்தவருக்கும் இடையிலான மனக்கசப்பும் இனவெறுப்பும் மறையவில்லை என்பதுதான் இந்த அளவுக்கு தீவிரமான எதிர்ப்புக்கும் கலவரத்துக்கும் காரணம் என்று அமெரிக்கர்களில் பலரும் நம்புகிறார்கள். அது உண்மையும்கூட. நைஜீரியப் பெண் எழுத்தாளர் சிமமாந்தா அடிச்சி அண்மையில் எழுதிய அமெரிக்கானா (அம்ங்ழ்ண்ஸ்ரீஹய்ஹட் - நைஜீரிய மொழியில் அமெரிக்காக்காரி என்று பொருள்) ஆங்கில நாவல், அமெரிக்காவில் ஆப்ரிக்க - அமெரிக்கர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, மிகநுட்பமான புறக்கணிப்புகள், அவமானங்களைப் பதிவு செய்கிறது.
ஃபெர்குசன் நகரில் கருப்பின மக்கள் அதிகம். ஆனால், காவல்துறையில் பணியாற்றுவோரில் பெரும்பாலோர் வெள்ளையர். இதுதான் இந்த பிரச்னைக்கு அடிப்படை என்கிறார்கள். இத்தனை காலமாக இந்த விவகாரத்தை இப்படியே நீட்டிக்க எப்படி முடிந்தது என்று புரியவில்லை.
கருப்பு இன மக்கள் என்று இல்லை. இந்தியர்கள் உள்ளிட்ட ஆசியர்கள் மீதும்கூட மேலை நாடுகளில் தாக்குதல் நடத்தப்படுகின்றன. இதற்குக் காரணம் தங்களது வேலைவாய்ப்புகளை வெளிநாட்டவர் தட்டிச் சென்று விடுகிறார்கள் என்கிற பொறாமைதான். இதை அமெரிக்க அதிபர் ஒபாமாவே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இந்தியாவிலும்கூட, காவல் நிலைய மரணங்களில் தலித்துகள், சிறுபான்மையினரே அதிகம். இவ்வாறு இறப்பவர்கள் குற்ற சரித்திரம் உடைய, பழைய குற்றவாளிகள் என்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும்கூட, காவல் துறையின் விசாரணை முறைகளும், குற்றவாளிகளை மிக இழிவாகப் பேசுவதும், மோசமாக நடத்துவதும், அவமரியாதை செய்வதும்தான், சட்டத்தின் தண்டனையைக் காட்டிலும் மிகக் கடுமையானதாக இருக்கிறது.
ஃபெர்குசன் கலவரக்காரர்களின் வசன அட்டை சொல்கிறது: "நீதி இல்லையேல், அமைதி இல்லை'.
இது அனைவருக்கும் பொருந்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

