சட்டப் பிரிவு 19(1)(டி) (இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்லும் உரிமை), 19(1)(இ) (எங்கு வேண்டுமானாலும் குடியிருக்கும் உரிமை), 16(2) (மதம், இனம், ஜாதி, பாலினம், பிறந்த தேதி, இருப்பிடம் உள்ளிட்ட எந்தக் காரணத்துக்காகவும் இந்தியக் குடிமகன் - அரசு வேலைவாய்ப்பிலோ, பதவியிலோ நிராகரிக்கப்படவோ, பாகுபாடு காட்டப்படவோ கூடாது) என்கிறது அரசியல் சாசனம். அதேபோல, வசிப்பிடம், குடியுரிமை, வேலைவாய்ப்பு தொடா்பான சட்டங்களை இயற்றும் உரிமை நாடாளுமன்றத்துக்கு மட்டும்தான் உண்டே தவிர, மத்திய - மாநில அரசுகளுக்குக் கிடையாது.