பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மேலாண்மைத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்

மேலாண்மை துறையில் சர்வதேசத் தேவையைப்பூர்த்தி செய்யும் வகையில், மாணவர்கள் தங்களது திறனை மேம்படுத்துவது அவசியம் என, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.

News image
Updated On :12 செப்டம்பர் 2013, 12:50 pm IST

மேலாண்மை துறையில் சர்வதேசத் தேவையைப்பூர்த்தி செய்யும் வகையில், மாணவர்கள் தங்களது திறனை மேம்படுத்துவது அவசியம் என, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக மேலாண்மைக் கல்வி மன்றம் தொடக்கவிழா புதன்கிழமை நடைபெற்றது. மன்றத்தைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:

சர்வதேச அளவில் அனைத்துத் துறைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவில் இந்திய மாணவர்களின் மேலாண்மைத் திறனை மேம்படுத்துவதற்கென மன்றம் தொடங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

குழு மனப்பானமை உணர்வுடன் இணைந்து பணியாற்றும் திறனுடனும்,புத்தாக்கச் சிந்தனையுடனும், தெளிவான முடிவுடனும், மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் பயிற்சி பெறவும், சர்வதேச மேலாண்மைத் தொடர்பான கருத்தரங்குகளில் பங்கேற்க வாய்ப்பளிப்பதும் பாராட்டத்தக்கது. சிறந்த மேலாண்மைத் திறன் மூலம் தான் நாட்டின் மனிதவளம்,இயற்கைவளம்,செல்வம் ஆகியவை சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என்றார்.

விழாவில், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.பொன்னவைக்கோ,இணை துணை வேந்தர்கள் டி.பி.கணேசன்,தங்கராஜூ,பதிவாளர் என்.சேதுராமன்,துறைத்தலைவர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.