தமிழகத்தில் வரும் 2014-15 கல்வியாண்டில் 18 பொறியியல் கல்லூரிகளில் பி.டெக். தகவல் தொழில்நுட்ப படிப்பை கைவிட முடிவு செய்துள்ளன.
கடந்த 2013-14 கல்வியாண்டில் இந்தப் படிப்பை 19 பொறியியல் கல்லூரிகள் கைவிட்டன. இப்போது இந்தப் படிப்பை கைவிட 18 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்துள்ளன. மேலும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளை இழுத்து மூடுவதற்கும் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள், கல்லூரி வளாகத் தேர்வுக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது உள்ளிட்ட காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.
நடந்து முடிந்த 2013-14 கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வில் இசிஇ பிரிவில் உள்ள அரசு ஒதுக்கீட்டிலான 42,966 இடங்களில் 24,992 இடங்கள் நிரம்பின.
பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் உள்ள 33,505 இடங்களில் 15,684 இடங்கள் நிரம்பின. பி.டெக். தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) துறையில் மொத்தமுள்ள 16,466 இடங்களில் 6,705 இடங்கள் மட்டுமே நிரம்பின.
பி.டெக். தகவல் தொழில்நுட்பம் படிப்பில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்ததால், இந்தப் படிப்பை இழுத்து மூடும் நிலைக்கு பல கல்லூரிகள் தள்ளப்பட்டுள்ளன.
மேலும் கம்ப்யூட்டர் சார்ந்த பிற படிப்புகளான இசிஇ, சிஎஸ்இ படிப்புகளிலும் மாணவர் சேர்க்கையை குறைக்க கல்லூரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
படிப்புகளை நிறுத்தும் இந்த கல்லூரிகள் பேராசிரியர் குறைப்பு நடவடிக்கையையும் இப்போது தொடங்கியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


