மாநில கராத்தே போட்டிக்கு தயாராகும் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவர்களை அப் பள்ளியின் ஆசிரியர்


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவர்களை அப் பள்ளியின் ஆசிரியர் மாநில அளவிலான கராத்தே போட்டிக்கு தயார் செய்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவியர் படித்து வருகிறார்கள். இவர்களின் முன்னேற்றத்திற்காக இங்கு பணிபுரியும் ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
விடுமுறை நாட்களை இந்த மாணவர்கள் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என்பதற்காக தனது செலவில் ஒவ்வொரு பருவத் தேர்வு விடுமுறையிலும், இலவச ஆங்கில பேச்சுப் பயிற்சி, கராத்தே, யோகா உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக சோட்டோகான் கராத்தே அமைப்பின் மாநில தலைமைப் பயிற்சியாளர் சென்சாய் எம்.செபஸ்தியான் மூலம் விடுமுறை நாட்களில் 3 முதல் 5 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்து வருகிறார். தற்போது டிசம்பர் மாதம் மாநில அளவிலான கராத்தே போட்டிகளை சோட்டோகான் கராத்தை அமைப்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் நடத்துகிறது. இந்தப் போட்டியில் தனது மாணவர்களை பங்கேற்க வைக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர் ஜெயக்குமார் முயற்சியை மேற்கொண்டு, சிறப்பாக கராத்தே செய்யும் சுமார் 36 மாணவர்களை குமிதே எனப்படும் சண்டைப் பயிற்சிக்கு மாநில பயிற்சியாளரைக் கொண்டு தயார் செய்து வருகிறார்.
பயிற்சியாளர் சென்சாய் செபஸ்தியான் இது குறித்து செவ்வாய்கிழமை கூறுகையில்: கடந்த 18 ஆண்டுகளாக மாநில அளவில் கராத்தே போட்டிகளுக்கு பல்வேறு இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளேன். அவர்கள் முழுவதும் மெட்ரிக்குலேஷன், மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர். முதல் முறையாக குறிப்பிட்ட ஆசிரியர் ஜெயக்குமாரின் முயற்சியால் ஒரு கிராமத்திலிருந்து ஏழை மாணவர்கள் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. மேலும் போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்தும் சுமார் 2 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்கிறார்கள். இந்தப் போட்டியில் இந்த கிராப் பள்ளி மாணவர்கள் மிகச் சிறப்பாகச் செய்து பரிசுகளை பெறும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...