மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க கூடிய கல்விமுறை அவசியம்: மனுஷ்யபுத்திரன்

மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கக் கூடிய  கல்விமுறை அவசியம், மனப்பாடம் செய்து தேர்வில் வெற்றி பெறுவது...
Published on
Updated on
1 min read

மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கக் கூடிய  கல்விமுறை அவசியம், மனப்பாடம் செய்து தேர்வில் வெற்றி பெறுவது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உகந்தது அல்ல எனவே மாணவர்களுக்கு அறிவாற்றலை வளர்க்க கூடிய புதிய கல்வி முறையை உருவாக்குவது தற்காலத்திற்கு அவசியமானதென்றார் மனுஷ்ய புத்திரன்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரகமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திங்கட்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாழில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவர் மேலும் பேசியது:

தற்காலத்தில் மாணவர்கள் மனப்பாடம் செய்து தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்றவர்கள் கூட நடைமுறை வாழ்க்கையில் பல விஷயங்களை அறியாதவர்களாக உள்ளது வேதனையான விஷயமாகும்.

மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளக்கூடிய வகையில் தைரியத்தையும் ,நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும்.

மாணவர்கள் மனிதநேயம்,மனிதப்பண்பை கற்றுக்கொள்ளக்கூடிய வகையில் க்ல்விமுறை அமைய வேண்டும். ஏதோ படித்து முடித்து அரசுப்பணி, பட்டம் ,பதவி, பணம் என்ற குறிக்கோளுடன்  செயல்படுவது சமுதாய மாற்றத்திற்கும், சமுதாய உயர்விற்ககும் எந்தவகையிலும் பலனளிக்காது.

மாணவர்கள் தினசரி செய்தித்தாள்களையுயும், அறிவு, பண்பாடு சார்ந்த புத்தகங்கள் படிப்பதையும் வழக்கமாகக் கொண்டு பொதுஅறிவையும் நடைமுறை வாழ்க்கை முறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

மற்ற மனிதன் எப்படி சிந்திக்கிறான் என்பதை அறிந்து கொண்டால்தான் மனித உறவுகள் சிறக்கும் வகையில்  வாழ்க்கை அமையும்.

உடலுக்கு புத்துணர்வு அளிக்க உடற்பயிற்சி அவசியம் மனதிற்கு புத்துணர்வு அளிக்க புத்தகங்களை படிப்பது அவசியமென்றார். பெண்கல்வி என்பது சமூக மாற்றத்திற்கு வித்திடும் தனிமனித புரட்சியாகும். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என பெண்கள் கல்விச்சாலைகளுக்கு செலவதையே பாவம் எந கருத்ப்பட்டதை முண்டாசுக்கவிஞன் பாரதியும் ,தந்தை பெரியாரும் ,பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக சமுதாயத்தில் அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்சும் நிலை ஏற்பட்டுளள்ளது.

இந்த சமுதாய புரட்சிக்கு வித்திட்ட டாக்டர்முத்துலெட்சுமி போன்றவர்கள் முனனுதாரணமாக திகழந்ததன் விளைவு இங்கு ஆயிரக்கணக்கான முத்துலெட்சுமிகளை இந்த பின்ததங்கிய பகுதியில் ரகமத் பள்ளி உருவாகக்கி உள்ளது பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது.

மாணவிகள் கல்வியுடன் ஆளுமைத்திறனையும் வளர்த்துக்கொள்வதன் மூலம் சிறந்த கல்வியாளர்களாக உருவாவதுடன, சிறந்த சமுதாயம் உருவாக பாடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

பள்ளி மாணழிகளனஅ கவிஅமிகு கலைநிகழ்ச்சிகல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஆர்.சகுந்தலா தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் எம்.ஏ.முஸ்தபா முன்னிலை வகித்தார்.

மனுஷ்யபுத்திரன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். தமிழாசிரியை செலவி மேரி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். துணைமுதல்வர் எஸ்.உமாமகேஸ்வரி நன்றி கூறினார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com