அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கலசலிங்கம் பல்கலையில் பி.டெக். விண்ணப்ப விநியோகம்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2016-17-ம் ஆண்டிற்கான பி.டெக். மாணவர் சேர்க்கைக்கான

News image
Updated On :11 டிசம்பர் 2015, 9:12 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2016-17-ம் ஆண்டிற்கான பி.டெக். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாணவர் சேர்க்கை பிரிவு இயக்குநர் டாக்டர் எஸ்.என்.ராமசாமி வரவேற்றார்.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆனந்த விநாயகர் சன்னதியில் விண்ணப்பப் படிவங்களை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் வேந்தர் க.ஸ்ரீதரன், ஒரு மாணவருக்கு விண்ணப்பத்தினை வழங்கி, விநியோகத்தைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இயக்குநர்கள் டாக்டர் எஸ்.சசி ஆனந்த், அர்ஜூன் கலசலிங்கம், சென்னை ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இயக்குநர் டாக்டர் எஸ்.அறிவழகி, பதிவாளர் வெ.வாசுதேவன், பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேந்தர் ஸ்ரீதரன் கூறுகையில், மாணவர் சேர்க்கை விண்ணப்பம் இந்தியா முழுவதும் உள்ள 20 மாணவர் சேர்க்கை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விநியோகம் தொடங்கியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.