போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சென்டாக் மாணவர் சேர்க்கை சிறப்புக் கலந்தாய்வு தொடக்கம்

புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ, பொறியியல் தொழில்பாடப் பிரிவுகளில் சேருவதற்கான சென்டாக் சிறப்பு கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை காலாப்பட்டில் உள்ள பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூன் 2015, 7:53 am

சுஜித்குமார்

புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ, பொறியியல் தொழில்பாடப் பிரிவுகளில் சேருவதற்கான சென்டாக் சிறப்பு கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை காலாப்பட்டில் உள்ள பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

சென்டாக் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான பொதுக் கலந்தாய்வு 25-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், பழங்குடியினத்தவருக்கு சிறப்பு

கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சென்டாக் தலைவரும், கல்வித்துறை செயலருமான ராகேஷ் சந்திரா தலைமை தாங்கினார். சென்டாக் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.

எம்பிபிஎóஸ் மறறும் பல் மருத்துவ பாடப்பிரிவில் இóச்சிறப்பு பிரிவுகளுக்கு மொத்தம் 36 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிரிவில் 50 பேருக்கும், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் பிரிவில் 20 பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 4 பேருக்கும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 10 பேருக்கும், பழங்குடியினர் பிரிவில் 14 பேருக்கும் அழைப்பு அனுப்பபட்டிருந்தது.

இதில் 36 எம்பிபிஎஸ் மற்றும் 13 பல் மருத்துவ பாடப்பிரிவுக்கான இடங்களுக்கு சிறப்புக் கலந்தாய்வு நடந்தது.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பாடப்பிரிவுகளில் வரும் 25-ம் தேதி பொதுக் கலந்தாய்வு நடக்கவுள்ளது. அதில் 1002 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜூன் 26-ம் தேதிக்குள் பொதுக் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.