2016–ம் ஆண்டுக்கான இந்திய விஞ்ஞான – தொழிற்சாலைகள் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) அமைப்பு இளம் ஆராய்ச்சியாளர் (ஜூனியர் ரிசர்ச் பெல்லோ–ஜே.ஆர்.எப்.) மற்றும் லெச்சரஸ்ஷிப் பணிகளுக்கான நெட் தேர்வுக்கான அறிவிப்பை சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஜூனியர் ரிசர்ச் பெல்லோசிப் பணிக்கான (என்.இ.டி.) தேர்வு எழுத விரும்புபவர்கள் 01.07.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. விரிவுரையாளருக்கான என்.இ.டி. தேர்வு எழுதுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.
குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி. மற்றும் அதற்கு இணையான படிப்புகள், மருத்துவ படிப்புகளான பி.எஸ். எம்.எஸ், எம்.பி.பி.எஸ்., பி.பார்மா, பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் மற்றும் படிப்புகளை முடித்தவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.
பொதுப்பிரிவினருக்கு ரூ.1000, ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை 09.09.2016-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனை 16.09.2016 தேதிக்குள் சென்று சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.csirhrdgdg.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை படித்தவர்கள், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும், விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை பெறுவதற்கும் இந்த தகுதித் தேர்வு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! தலைவர்கள் வாக்களித்தனர் - நேரலை!
தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்

கிளாம்பாக்கத்தில் பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


