நாளை பிளஸ் 2 தேர்வு முடிவு: 9 லட்சம் பேருக்கு எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுக்கான மதிப்பெண்கள் 9 லட்சம் மாணவ, மாணவியருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக


தமிழகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுக்கான மதிப்பெண்கள் 9 லட்சம் மாணவ, மாணவியருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னையில் அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
சென்னை தேர்வுத்துறை இயக்குநரகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகளைஅரசு தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிடுகிறார்.
இணையதள முகவரிகள்: தேர்வு முடிவுகளைwww.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும். தனித் தேர்வர்களுக்கும் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்லிடப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய தகவலியல் மையத்திலும் ('நிக் சென்டர்'), மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் இலவசமாகத் தேர்வு முடிவை அறிய தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்:
மே 15-ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைத் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து
www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மே 17 முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற, தேர்வெழுதிய பள்ளி அல்லது மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
விடைத்தாள் நகல்-மறுகூட்டல்:
விடைத்தாள் நகல், மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வெள்ளிக்கிழமை (மே 12) முதல் மே 15 வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.
நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தத் திட்டம்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 12) வெளியிடப்படும். மாணவர்களின் சான்றிதழ் ஆங்கிலம் மற்றும் தமிழில் வழங்கப்படும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை முறையாகப் பதிவு செய்யாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புதிய பாடத் திட்டங்கள் குறித்து வெள்ளிக்கிழமை (மே 12) ஆலோசனை செய்யப்படவுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஜூன் மாதம் சிறப்பு துணைத் தேர்வுகள்
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பத் தேதிகள் குறித்து விரைவில் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...