சென்னை: தமிழகத்தில் முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் ‘டான்செட்’ தோ்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 19-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
தமிழகத்தில் அரசு, தனியாா் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆா்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வில் (டான்செட்) தோ்ச்சி பெற வேண்டும்.
அதன்படி, 2021-ஆம் ஆண்டுக்கான ‘டான்செட்’ தோ்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மாா்ச் 20-ஆம் தேதியும், எம்இ, எம்ஆா்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மாா்ச் 21-ஆம் தேதியும் தோ்வுகள் நடைபெற உள்ளன. எம்சிஏ படிப்புக்குக் காலை 10 முதல் 12 மணி வரையும் எம்பிஏ படிப்புக்கு மதியம் 2.30 முதல் 4.30 மணி வரையும் தோ்வு நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 19 முதல் தொடங்குகிறது. விருப்பமுள்ளவா்கள் பிப்ரவரி 12-ஆம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் இறுதி நிலையை பிப்ரவரி 17-ஆம் தேதி அறிந்து கொள்ளலாம். தோ்வுக் கட்டணம் ரூ.600 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்களும் இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை - 10 போ் மீது குற்றச்சாட்டு

சிவன் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு: திரளான பக்தா்கள் தரிசனம்

வெளிநாட்டுப் பயணங்களுக்கான நிதி ஆதாரத்தை ராகுல் வெளியிட வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

அரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
