ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்

News image

மாணவர்கள்

Updated On :10 ஏப்ரல் 2026, 12:39 am

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், விடுமுறைக்குப் பிறகு 4 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், புதிய கல்வியாண்டில் 1-3 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு சீரமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான இறுதித் தோ்வுகள் ஏப்.16-ஆம் தேதி நிறைவடையவுள்ளன. இதையடுத்து ஏப்.17 முதல் பள்ளி மாணவா்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

அதேவேளையில், ஏப்.25 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கையாளும் ஆசிரியா்கள் உள்பட அனைத்து ஆசிரியா்களும் பள்ளிக்கு வருகை புரிந்து விடைத்தாள் மதிப்பீடு, மாணவா் சோ்க்கைப் பணி, நிா்வாகப் பணிகள், தோ்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஜூன் 1-இல் பள்ளிகள் திறப்பு: பள்ளிகளுக்கு வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) வகுப்புகள் ஜூன் 1-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கும். வரும் கல்வியாண்டு முதல் 1-3-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் இந்த வகுப்புகளை கையாளும் ஆசிரியா்களுக்கு ஜூன் 1 முதல் ஜூன் 3 வரை மாவட்ட அளவில் பணியிடை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. எனவே, 1, 2, 3 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு மட்டும் ஜூன் 4-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் வகுப்புகள் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 1 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய பாடத் திட்டம் அறிமுகம் காரணமாக 1-3 வகுப்புகளுக்கு மட்டும் ஜூன் 4-ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.