பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்ட தவெக கூட்டணியில் இல்லை! இந்திய கம்யூ. லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

100% வேலை வாய்ப்பை உறுதி செய்யும் சிவில் பொறியியல் படிப்புகள்!

2025 - 26ஆம் கல்வியாண்டில் 100% வேலை வாய்ப்பைப் பெற்றுத் தந்த சிவில் பொறியியல் படிப்புகள் பற்றி..

News image

பொறியியல் கல்லூரிகள் - DPS

Updated On :5 ஜூன் 2026, 1:34 pm IST

என்ன படித்தால் வேலை கிடைக்கும்? என்ன படித்தால் கைநிறைய சம்பாதிக்கலாம் என்று மாணவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு 100 சதவிகித வேலை வாய்ப்பை உறுதி செய்த நான்கு முதுநிலை படிப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2025 - 2026ஆம் ஆண்டு படிப்பை நிறைவு செய்த மாணவர்களில் 100 சதவிகிதம் வேலை வாய்ப்பைப் பெற்றவர்கள் எந்தெந்த படிப்புகளை நிறைவு செய்தவர்கள் என்பது குறித்துத் தேடியபோது கிடைத்த தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கலாம்.

காரணம், செய்யறிவு, கணினி அறிவியல் படித்தவர்களோ இல்லை. சிவில் என்ஜினியரிங், ஸ்டிரக்சுரல் என்ஜினியரிங், கன்ஸ்டிரக்ஷ்ன் பொறியியல், என்விரான்மென்டல் பொறியியல், என்விரான்மென்டல் மேனேஜ்மெண்ட் முதுகலை படிப்புகளை நிறைவு செய்த மாணவர்கள் அனைவரும் வேலை வாய்ப்புடன் வெளியேறியிருக்கிறார்கள்.

அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரையிலான ஊதியத்துடன் பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

எல் அன்ட் டி போன்ற முன்னணி கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மாணவர்களை தேர்வு செய்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டு அடிப்படை பொறியியல் படிப்புகளை முடித்த மாணவர்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன.

தற்போது முன்னணி நிறுவனங்களுடன் பல்கலைக்கழகங்கள் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றன. இன்டர்ன்ஷிப் பயிற்சிகளும் மாணவர்களுக்கு பேருதவி செய்கின்றன.

இதுபோன்றே இந்த ஆண்டு சிவில் என்ஜினியரிங் படித்த மாணவர்களில் பெரும்பாலானோர் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அதிலும், 40 சதவிகித மாணவர்கள் அரசு வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள். 5 சதவிகிதம் பேர் சொந்த தொழில் தொடங்குகிறார்கள் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

தற்போது, நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் அதிக ஆர்வம் காட்டிவரும் நிலையில் சிவில் என்ஜினியரிங் படிப்புக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.

எனவே, சிவில் இன்ஜினியரிங் படிப்புகளில், செய்யறிவு, புதிய தொழில்நுட்பங்கள், பாடங்களை விரிப்படுத்தி, மேம்படுத்த பல்வேறு கல்லூரிகளும் திட்டமிட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.